Thursday, August 22, 2024

திருத்தணியை மீட்ட ம.பொ.சி. திருப்பதிக்குச் சென்று போராடிய நாள்


 திருத்தணியை மீட்ட ம.பொ.சி. திருப்பதிக்குச் சென்று போராடிய நாள்

16.8.1947

சென்னை மாகாணத்தின் இந்திய விடுதலை நாள் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவி ஏற்ற நாள்.

அந்நிகழ்வில் ம.பொ.சிவஞானம் பங்கேற்றார்.

மறுநாள் ம.பொ.சி. அவர்கள் "போர் முறையும், போர் முனையும் மாறும் நாள்" என்று அறிக்கை விட்டார். 

தமது சகாக்கள் 12 பேருடன் திருப்பதி தமிழருக்கே சொந்தம் என்று கூறி புறப்பட்டார். 

திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், திருத்தணி , நகரி ( புதுப்பேட்டை), புத்தூர், திருப்பதி வரை ஒவ்வொரு ஊரிலும் பேசினார். 

ஆகஸ்ட் 19ஆம் நாள் ம.பொ.சி. குழுவினர் திருப்பதி ரயில் நிலையம் அடைந்தனர். 

அவருக்கு வரவேற்பு கொடுக்க வந்த ம.பொ.சி.யின் சிறை நண்பர்

திருப்பதிக் கீழ்த்திசை வேங்கடேசுவரர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நாராயணசாமி நாயுடு தாக்கப்பட்டார்.

கீழ்த்திருப்பதியில் கலவரச் சூழலுக்கு இடையில்  கோயில் குளக்கரையில் பொதுக் கூட்டம் தொடங்கியது.

மங்கலங்கிழாரையும், கொ.மோ. ஜனார்த்தனம் ஆகிய இருவரையும் பேசவிடாமல்  ஆர்ப்பாட்டக்காரர்கள் குளக்கரையில் உள்ள மரங்களில் ஏறி கிளைகளை உடைத்து கூட்டத்தினர் மீது வீசினார்கள். ம.பொ.சி. பேசிய போதும் கூச்சல் நின்றபாடில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியோடு காணப்பட்டார்கள். " ‘’வேங்கடத்தை விட மாட்டோம்" என்று ஒரு மணி நேரம் உரையாற்றினார்.


 #மபொசி. 


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

16-8-2024.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...