#சென்னைநாள் #Madrasday ————————— இன்றைக்கு சென்னை உருவான நாள். அதற்கு சென்னை தினம் என்று பெயர் வைத்து பலரும் இந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தை நினைவு கூறுகிறார்கள். பிரிட்டிஷ் ராஜதானியில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த நகரத்திற்கு பல வரலாறுகள் உண்டு. மதராஸ் எனவும் பட்டணம் எனவும் சொல்லப்பட்டது. அக்காலத்தில் விஜயநகர வம்ச ஆட்சியின் பிரதிநிதி சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் 17,000 ரூபாய்க்கு பிரிட்டிஷ் வணிகத்தார் இந்த துறைமுகப் பகுதியை விலைக்கு வாங்கினார்கள் என்று ஆவணங்கள் கூறுகின்றன. நான் முதன்முதலாக சென்னைக்கு வரும்போது 1959 என்று நினைக்கிறேன் நினைவுகள் சற்று மங்கலாகத்தான் இருக்கின்றன. அப்போது சென்னையில் மூர் மார்க்கெட் அதன் அருகில் மிருகக்காட்சி சாலை அதற்கடுத்து சைனா பஜாரில் இருந்து பாரிஸ் கார்னர் வரை பயணித்த ஞாபகம். அன்றைக்கு அண்ணா நகர் கிடையாது. பெசன்ட் நகர் கிடையாது அடையாறும் அங்கு சில வீடுகளும் இருந்தன. இன்று அண்ணா சாலை என்று வழங்கப்படும் மவுண்ட் ரோடு மற்றும் மெரினா கடற்கரை என நீளும் தொடர் சாலைகளிலும் அதை ஒட்டியபகுதிகளிலும் வாகனங்களும் மக்களும் புழங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு படிப்பு கல்வி முடித்து அரசியல் மற்றும் சட்டப் பணிகள் சம்பந்தமாக சென்னைக்கு வந்து குடியேறி 45 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த வகையில் சென்னையுடன் எனது தொடர்பு நீண்ட தன்மையுடையது. எனது கிராமத்தை விட்டு வந்த பிறகு குறிப்பாக என்னை அரசியலிலும் செய்யும் பணியிலும் அதிகம் அடையாளப்படுத்த சென்னை உதவி இருக்கிறது. சென்னை வாழ்க்கையில் எத்தனையோ பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளையும் பெற்றேன். பெருந்தலைவர் காமராஜர் கலைஞர் எம்ஜிஆர் பிரபாகரன் என பல புள்ளிகள்….அதேபோல் இந்தியாவின் வட புலத்துத் தலைவர்கள் ராம்விலாஸ் பஸ்வான் தாரகரேஸ்வரி சின்கா கேபி உன்னிகிருஷ்ணன் சந்திர சித் யாதவ் கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், அசாம் முன்னாள் முதல்வர் மகந்தா மற்றும் புக்கன் போன்றவர்களோடு அரசியல் காரணங்களுக்காக சென்னையில் அலைந்த நாட்கள்இவர்களோடெல்லாம் நட்பு கொண்டது எல்லாம் நினைவுகள். கடந்த 50 வருடங்களில் சென்னை தன்னை வெகுவான நிலப்பரப்பில் விஸ்தரித்துக் கொண்டு விட்டது. இரண்டு மூன்று மடங்கு மக்கள் தொகை அங்கே பெருகி இருக்கிறது! அன்றைய காலம் போல் இல்லாமல் சென்னைக்கு வந்து குடியேறிய பலராலும் அது பலவகைமையான பண்பு மாற்றங்களை அடைந்திருக்கிறது. தொழிற்சாலைகள் ஐடி வளாகங்கள் என்று அதற்கு ஒரு புதிய முகமும் இருக்கிறது. எழுவது என்பதில் இருந்த மக்கள் பண்பாடு நகரத்தை ஒட்டிய அவர்களுடைய வேலைவாய்ப்புகள் கேளிக்கைகள் சினிமாக்கள் அலுவலகங்கள் எல்லாம் மாறி இன்றைய 2000 களின் கலாச்சாரம் வேரொன்றாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று தான் என்னால் சொல்ல முடியும். இப்படி சென்னை குறித்த பல வகையான பார்வைகள் என்னிடம் இருக்கிறது அதை நீண்ட விளக்கமாக தான் எழுத முடியும். நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சென்னை தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியானதொரு சென்னை நாளில் குறிப்பிடத் தகுந்த ஒரு செய்தியும் நிகழ்வும் என்னவென்றால் மக்கள் வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் அவர்கள் தனது கட்சிக்கான கொடியையும் தனது கட்சிக்கான முறையான அறிவிப்பையும் இந்த சென்னை நாளில் வரவேற்புடன் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கும் இந்த சென்னை தின நாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… வாழ்க சென்னை! #chennaiday #சென்னைநாள் #Madrasday #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 22-8-2024.
Thursday, August 22, 2024
Subscribe to:
Post Comments (Atom)
july 1
Good and deep meaningful aspects… @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment