Thursday, August 22, 2024

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்

 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 

திருவாரூரில் தியாகராஜர் 

திருநெல்வேலியில் நெல்லையப்பர் 

திருவையாறில் ஐயாறப்பர் 


திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 

திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 

திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 

திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்


திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 

திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 

திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 

திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 


திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 

திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 

திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்

திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 


திருச்சியில் தாயுமானவர் 

திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 

திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 

திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 


திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்

திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்

திருமழபாடியில் வைத்தியநாதர் 

திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்


திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 

திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்

திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 

திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 


இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில், ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.



'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறோம்.


இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர், வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.


தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 


ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.


தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.


எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு, இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.


இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர்.

வாழ்க தமிழர்களின் புகழ்.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...