Thursday, August 22, 2024

#*நம்ம சென்னை* *385 birthday*... #*chennai day* #*சென்னை நாள்* #*Madrasday*

#*நம்ம சென்னை*
*385 birthday*...
#*chennai day*
#*சென்னை நாள்*
#*Madrasday*
———————-
*தெலுங்கர் சென்னப்பநாயக்கர் பற்றிய மத்திய (மாநில )அரசின் தொல்லியல்துறை ஆதாரங்களுடன் பதிவு*...

*சென்னைப்பட்டணம்*:
*தமர்லா சென்னப்ப நாயக்கர்*

*காளஹஸ்தி நாயக்கர்கள்* (Nayaks of Kalahasti) 
~~~~~~~~~~~~~~~~~

வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் 
காளஹஸ்தி மற்றும் வந்தவாசி 
ஆட்சியாளர்கள் இவர்களே ஆவர். இவர்களில் முக்கியமானவர், சென்னப்ப நாயக்கராவார்.காளஹஸ்தி நாயக்கர்கள்,விஜயநகரப் பேரரசை 
ஆண்ட இறுதி அரச வம்சமான அரவீடு மரபினருக்கடங்கிய சிற்றரசர்களாக இருந்தோர்களாவர்.

•புகழ்பெற்ற ஆட்சியாளர்கள்•

தமர்லா சென்னப்ப நாயக்கர்.

சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மாவானவர்,யாச்சம நாயக்கரின்
 தங்கையும், வேலுகோட்டி கஸ்தூரி ரங்கரின் மகளுமாவார். இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர்.விஜயநகர வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்திமற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர்.சென்னை நகரம் இவரது பெயரால்தான் அழைக்கப்படுகிறது விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். 

விஜயநகரபேரரரசின்மருமகன்கள்

விஜய நகரப் பேரரசர் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயரின் சகோதரிகளை தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கர் திருமணம் செய்திருந்தனர்.
தமர்லா வெங்கடப்ப நாயக்கர்.

தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணம்மா இவர்களின் மகன் என்றும் .இவரின் தாத்தா வெங்கடபூபாலன் என்றும், கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும், எள்ளு தாத்தா தமர்லா அப்ப ராஜு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..விஜய நகரப் பேரரசர்  மூன்றாம் வேங்கடனாகிய பெத்த வேங்கடராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் ,தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயநகரப் பேரரசர் பெத்த வெங்கட ராயன் (கி.பி. 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். பெத்த வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னைகடற்கரை நிலப்பரப்புகளைபிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றுள்ளனர்.

தமர்லா அய்யப்ப நாயக்கர்.

இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவர் பூவிருந்தவல்லியில்தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசிபோன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.

தமர்லா அங்கபூபாலன் நாயக்கர்.

தமர்லா சென்னப்ப நாயக்கரின் கடைசி மகனான இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவர், இவர் சிறந்த  கவிஞரும், நூலாசிரியருமாவார்.  அங்க பூபால நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர் இவர் உஷா பரிணயம் என்னும்  இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம்என்னும் ( 16 குணங்கள் உடன் 64 மந்திரம் அடங்கிய ) 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் .அங்க பூபாலன் பல  இலக்கியங்கள் எழுதியுள்ளார் . இவர் சிறந்த கவிஞரக கருதப்படுகிறார்.

காளஹஸ்தி நாயக்கர்களும் இலக்கிய பங்களிப்பும்.

மிக சிறந்த இலக்கிய நூலக கருத்தப்படுகிற உஷா பரிணயம்  மற்றும் பகிஸ்வா சரித்திரம் போன்ற  நூல்களை எழுதியது காளஹஸ்தி தமர்லா நாயக்கர்களே ஆவர்.

தமர்லா வெங்கலபூபாலன் எழுதிய பகிஸ்வா சரித்திரம் என்னும் நூலில் காளஹஸ்தி நாயக்கர்களின் குடும்ப வரலாற்றையும் சென்னப்பட்டினத்தையும் அதன் உருவாக்கத்தையும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
••••••

மாலன் நாராயணன் பதிவு

பென்னேஸ்வர மடம் கிராமத்தில் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம் 1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு 1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன் பட்டணம் குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை சுல்தான்களின்  ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் கம்பண உடையார் . .

விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்து இப் பகுதியை ஆட்சி செய்த தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கர், சந்திரகிரிக் கோட்டை இராஜா மகால் தர்பார் மண்டபத்தில் இருந்து, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தன் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று சதுரமைல் பரப்பளவுள்ள ஒரு நிலத்துண்டினை வர்த்தகத்திற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியான ஃபிரான்சிஸ் டேக்கு சட்டப்படி குத்தகைக்கு வழங்க  ஆகஸ்ட் 22ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த நாள் .  சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

#chennaiday
#சென்னைநாள்
#Madrasday

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-8-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...