Thursday, August 22, 2024

"#மனதில்நிர்சலனம்_நிர்மலம்’’

 "#மனதில்நிர்சலனம்_நிர்மலம்’’ 

—————————————

ஆட்டுவித்தால் யாரொருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசையென்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா….


கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்,கையளவேஆனாலும்  கலங்க மாட்டேன்.உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா, உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா..!


"மனதில் நிர்சலனம் -  நிர்மலம்’’என்று அது பதவியில் பொருளில் கிடைக்காது. அது நமது பொது வாழ்வில் பணிகள்- வினைகள் கழியும் இடம். அது வே எமது தவம்;பேரின்பம் நிலவும் இடம். இதையே ஞானிகள் "பணி செய்து லாப நோக்கு இல்லாமல் சும்மா இரு" என்று சொன்னார்கள். இந்த உலகில் எல்லாம் இயல்பா நடந்தால் அழகு. நீங்க நேரத்தைக் கணிக்கலாம். ஆனா அந்த நேரத்துல என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்?. ஏதோ ஒரு எதிர்பார்க்காத நேரத்துல மகிழ்ச்சியான விடயம் நடந்து விடும். அது ஊழ்….


உண்மைக்காக நாம் பாடுபடுவது என்றும் சமுதாயத்தால் கவனத்தில் கொள்ளப்படும்…..

சின்னச் சின்ன நிழல்களை

தொடர்ந்துவரும் பிரவாகத்தில்

சமரசம் அற்ற சுழலில்

அவனது எதிர்ப்பின் மூச்சு

அடுத்த திருப்பம் கண்டு முழங்கும்…


இங்கு அரசியல் வானில்

மப்பும் மந்தாரமும்…..

வால் வெள்ளி யார் ???

யாரும் இல்லையே….கசடுகள் உள்ளன.


அதிகாரம், அதன் மூலம் சம்பாரித்த அசுத்த செல்வம், குண்டர்கள் இவையெல்லாம் தற்காலிகமானவை, என்பதை உணர்ந்தால் மனதில் ஆணவம் என்ற எண்ணம் ஒன்று உண்டாகாது.

பிழைகளை,தவறுகளை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது.அது கம்பீரம்….


இங்கு நியாயமற்ற கேள்விகளுக்கு 

பதில் மட்டும் நியாயமாக வேண்டுவது, வாதமே இல்லை; தீவிரவாதம்..! இது வடிக்கையாகி விட்டது.


"#மனதில்நிர்சலனம்_நிர்மலம்’’ 


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

20-8-2024.






















(படம் - எங்கள் கிராமத்து நாட்டுப்புறா 10 நாள் திருவிழா)

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...