Thursday, August 22, 2024

நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

 நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

சரிதான் ஒத்துக்கொள்ளலாம்! 

அப்படி அவர் நவீன தமிழகத்தை உருவாக்கும் போது அவருடன் நெருக்கமாக இருந்து பலரையும் முதல்வர் ஸ்டாலின் ஏன் ஒதுக்கி வைத்திருக்கிறார். உண்மையைச் சொன்னால் தன் தந்தை   கலைஞரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அவரது நினைவை நீக்கித் தான்    இன்று ஸ்டாலின் தன் ஜமாவை வைத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்


அப்படி  கலைஞரோடு இணைந்து பணியாற்றியவர்களை அவருக்கு விருப்பமானவர்களை ஒதுக்கி வைக்கச் சொன்னது இன்றைக்கு ஸ்டாலின் கூட இருக்கும் பதவி ஆசைகளும் பணத் ஆசைகளும் கொண்ட அதிமுக அன்றைய ஜெ ஜால்ரா கும்பல்கள் தான்.

ஏறக்குறைய இன்றைய ஸ்டாலின் ஆட்சியில் கலைஞருடன் இருந்த கடந்த கால அறிவு ஜீவிதத் தொகுதி முடிந்துவிட்டது. முழுக்க பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கூட்டம் மாவட்டங்கள் தோறும் அரசு ஆட்சி செய்கின்றன.


போகட்டும்


கலைஞர் தமிழ் இனத்தின் காவலர் என்று ஸ்டாலின் சொல்கிறார்.


ஈழத் தமிழர் பிரச்சனையில் அந்த இன உணர்வு எங்கே போனது? 

அவர்கள் தமிழர்கள் இல்லையா?


இனம் என்றால் ஐரோப்பிய ஆசிய மங்கோலிய ஆப்பிரிக்க இனங்கள் என்றால் ஸ்டாலின் எந்த இனத்தை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. "அவரவருக்கு நிகழாத வரை நிகழ்வது எல்லாம் வெறும் செய்தி தான்...


#கேஎஸ்ஆர்போஸட்

#ksrpost

19-8-2024.


#DMKFails

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...