Thursday, August 15, 2024

நேற்றும் இன்றும் கிராமத்தில் திருவிழா…..

 நேற்றும் இன்றும் கிராமத்தில் திருவிழா…..

பழைய சைவ உணவு 

நினைவில் …. இன்று கிராமத்து வீட்டில்!


கல்சட்டியில் பழயது,


ஈயச்சொம்பில் ரசம்,

 

 உருளியில் கீரை,


 குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம், 


 வெங்கலப்பானையில் அரிசி உப்புமா,


 அகன்ற வாணலியில் புளி உப்புமா,


 டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காபி,


 இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா, அந்த பொறுக்கு அடை அடையாக,


 தொன்னையில் பாயசம், 


மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம், 


பருப்பு தெறிக்க  புஷ்டியான ‘ஆமை’ வடை,  


அதை விண்டு ஒரு விள்ளலை பக்கத்திலுள்ள தயிர்ப்பச்சடியில் ஒரு செல்லப் புரட்டு, 


ஒரு அழகிய பலாச்சுளை, அதை மெல்ல கீறி நடுவில் தேனை கொஞ்சமாக விட்டு.......மோருஞ்சாதத்துக்கு


உள்ளே பீங்கான் வெளியே கருப்பாக இருக்கும் கைப்பிடி வைத்த பால் காச்சும் பாத்திரம். அதை குமிட்டி இல்லை மரத்தூள் அடுப்பில் வைத்து  குறைந்த தீய்யில் பால் காச்சனும்..


 இலையின் எங்கோ ஓர் ஓரமாக மறைந்து இருக்கும் பச்சைமிளகாய்ச் சட்னியில் ஆட்காட்டி விரலை பட்டும் படாமலும் தொட்டு, நாக்கின் நடுவில் ஒரு சின்ன இழுப்பு .........


ஆஹா அந்த சுகம் கிட்டுமா!


பழைமையில்தான் எத்துனை நிறைவு!!


பிளாஸ்டிக் டம்ளர்களாலும், மினரல் வாட்டர் பாட்டில்களாலும், பிரெஸ்டிஜ் குக்கர்களினாலும், டைனிங் செட்டுகளினாலும் மறக்கடிக்கப்பட்டனவே!

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...