விடுதலை நாள் சிந்தனை
பொது வாழ்வு நலன் நலன் கருதியோ அல்லது ஒருவர் தன்னை அறவாதி என்று கூறிக்கொள்ளும் போதோ நாம் அவருக்கு உதவியாக இருந்து அவரைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை.
ஆனால் அவரோ வானத்தில் ஏறி மாயமாகி எங்கேயோ தனக்கான சுயநலத்தில் புழங்கி கொண்டிருக்கும் போது சரி இது ஒரு தற்செயல்தான் ஒரு வழியாக அவர் மனம் திரும்பி இறங்கி வருவார் என்று பார்த்தால் இறங்கும் போதே எந்த தோள்களில் ஏறி போனாரோ அந்தத் தோள் மீது அதுதான் நாம் உயர்த்திவிட்ட நம் தோள் மீது மிதித்து அழுத்தி இன்னமும் சித்திரவதைக்கு உள்ளாக்கியபடியே தன்னை இன்னும் பலமாகக் காப்பாற்றிக் கொள்கிறார் என்கிறபோது நாம் எப்படி நம்ப முடியும்!
அவரைப் பசு என்று நாம் நம்பினோமோ என்னவோ? அந்தக் காலங்கள் போகட்டும்! ஆனால் இன்னும் அவர் தனது கூர்மையான கால் நகங்களை மறைக்க முடியாமல் பசுவின் தோலைப் போர்த்திக் கொண்டு
பரிதாபகரமாகத் திரிவதை தான் சகிக்க முடியவில்லை!!
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
15-8-2024
No comments:
Post a Comment