Thursday, August 15, 2024

மீடியாக்களுக்கு தைரியம் இருந்தால் இன்னும் ஒரு சில நாட்களில் மேட்டூரில்

 மீடியாக்களுக்கு தைரியம் இருந்தால் இன்னும் ஒரு சில நாட்களில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் நீர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதியில் உள்ள வங்க கடலில் சேமிக்கப்படுவதை கேமரா வைத்து வீடியோ எடுத்து பரப்ப தைரியம் இருக்கிறதா? 

கர்நாடகா விடம் இருந்து ஒவ்வொரு டி எம் சி தண்ணீருக்கும் சண்டை போட்டு கோர்ட்டுக்கு போய் வாங்கி வருகிறார்கள் ஆனால் அவர்கள் உபரியாக திறந்து விடும் நீரை கடலுக்கு சிறு அளவு செல்ல வேண்டும் அதில் பெரும் அளவு சேமிக்காமல் இவர்கள் அப்படியே கடலுக்கு அனுப்புவதை பொதுமக்களுக்கு காட்ட வேண்டும்? 


உயரம் குறைவு தடுப்பணை கட்ட முடியாது என்று சாக்கு போக்குகள் சொல்லக்கூடாது அரசாங்கம் என்பது லட்சக்கணக்கான கோடிகளில் பட்ஜெட் போடும் ஒரு மிகப்பெரிய எந்திரம் என்னும் நிலையில் அரசு நினைத்தால் எதுவும் சாத்தியமே அதுவும் நவீன எந்திரங்கள் வந்துள்ள இந்த காலத்தில் எதுவும் சாத்தியமே ஒரு ஆற்றை 20 அடி உயரத்திற்கு தூக்கி கூட கொண்டு போகலாம் அதுவும் சாத்தியம்தான்..


ஆனால் எதையுமே செய்யாமல் எழுபது ஆண்டுகளாக காவிரி பிரச்சனையில் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு கர்நாடகா மற்றும் தமிழர் பகுதியில் ஒரு உள்ள மக்களை ஒருவித கொதிநிலையோடு வைத்துக் கொள்வதுதான் இந்த 70 ஆண்டுகால வரலாறு. 


இவர்களிடம் எந்தவித  ஒரு தொலைநோக்கு பார்வையோ அல்லது திட்டங்களோ இல்லை என்பது தான் பூம்புகார் கடற்கரையில் வங்கக் கடலின் மீது பாயும் காவிரி நீர் சொல்லும் செய்தி ..


No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...