வயநாடு நிகழ்வு குறித்து பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானி மாதவ் காட்கில்
2013 ல் மேற்கு தொடர்ச்சி மலை குறித்து ஆராய்ந்து பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானி மாதவ் காட்கில் கேரள அரசிற்கு அறிக்கை அளித்திருந்தார். அதில் வயநாட்டின் மலைக்கிராமங்களை ஆக்கிரமிப்பில் இருந்துபாதுகாக்கா விட்டால் வருங்காலத்தில் மிகப்பெரும் பிரளயம் ஏற்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியில் அவர் அன்று குறிப்பிட்டது மாதிரியே நடந்து விட்டது. இது குறித்து சில தினங்களுக்கு முன் இவ்வாறு கூறி இருந்தார். நான் 2013 ல் வயநாட்டின் மலைப்பகுதிகள் குறித்து ஆராய்ந்து அரசிற்கு அறிக்கை அளித்த போது எனக்கு எதிராக அப்பாவி மக்களை சிலர் தூண்டி விட்டார்கள். இப்போது அவ்வாறு போராட தூண்டி விட்டவர்கள் எல்லாம் உயிரோடு உலாவுகிறார்கள். போராடிய அப்பாவி மக்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கிறார்கள். மாதவ் காட்கிலின் கூற்று உண்மையாகி இருக்கிறது.
No comments:
Post a Comment