Thursday, August 22, 2024

தாயம் உருட்டுவோமா?

 தாயம் உருட்டுவோமா?

----------------------------

தாயம் என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வருவது, Mr.சகுனிதான். மாபாரதத்தில் பரந்தாமனே பயந்தவொரு கேரக்டர். இத்தனைக்கும் ஆள் பலசாலி எல்லாம் இல்லை. ஒரு கால் ஊனம் வேறு. இருந்தாலும் பாண்டவர் பக்கம் நின்ற கிருஷ்ணன் அடிக்கடி இதைச்சொல்கிறான் - "இங்கே நான் எப்படியோ, அதுபோல் அந்தப்பக்கம் சகுனி இருக்கிறான். கவனம் தேவை..!" 


ஏனெனில், சகுனியிடம் தாயம் இருந்தது.


அதுசரி, ஏன் சகுனியின் தாயம் எப்போதும் ஸ்பெஷல்?? - ஏனெனில் காந்தாரியின் (Mrs.திருதிராஷ்டிரன்) தந்தையான சுபலனை பீஷ்மர் குடும்பத்தோடு சிறைவைத்து அத்தனை பேருக்கும் ஒரேயொரு கைப்பிடி அரிசி மட்டும் உணவாக கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கையில், சுபலன் தன் குடும்பத்தை கூப்பிட்டு இவ்வாறு சொல்கிறான்- 


"நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் இந்த உணவை உண்டு பிழைத்து, நமக்கு அநியாயம் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்...!"


அதன்படி அதனை பேருமே காந்தாரியின் தம்பியான சகுனிக்கு தங்கள் அரிசியை விட்டுக்கொடுத்து அவன் உயிரைவளர்த்து ஒவ்வொருவராய் மடிகின்றனர். இறுதியாய் சுபலன் இறக்கும் முன் சகுனியைக் கூப்பிட்டு அவனது ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்து இவ்வாறு சொன்னான்-


"இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வொரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே...!" 


சகுனி கேட்டுக்கொண்டான்.


பின்னர் "நான் இறந்த பிறகு என் முதுகெலும்பை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் கௌரவர்கள் மீதான என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும். நீ எப்படி தாயக்கட்டையை உருட்டினாலும் நீ விரும்பியபடியே எண்ணிக்கை விழும். நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்...!" என்றான். 


பிறகென்ன? 


Rest is History.

Sorry, Rest is Epic.


கௌரவர்களை அளிக்க வேண்டுமென்பது கண்ணனின் நோக்கமல்ல, தர்மத்தை நிலைநாட்டுவதே அவன் நோக்கமாய் இருந்தது. அதிலும் அவன் பாதிதான் வென்றான். ஆனால் "கௌரவர்களை அழித்தே தீருவேன்..!" என்று சபதமெடுத்த சகுனி உறவாடிக்கெடுப்பதற்காகவே தாயத்தை கையில் எடுத்தான்.


"இதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்..? இதத்தான் (தாயக்கட்டை மாதிரி) இந்த உருட்டு உருட்டிட்டு இருந்தியாக்கும்..?" என்று பொருமுவது புரிகிறது.


தாயம், is related to Intelligence.

தாயம், is related to Decision making.

தாயம், is related to இராஜதந்திரம்.


ஒரு சின்ன உதாரணம். 

ஆதிகாலத்தில் அரசர்கள் தாயம் விளையாடும்போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு வைத்திருந்தார்கள். 

1,5,6 &12 இந்த எண்கள் விழுந்தால் Extra Chance. மீண்டும் உருட்டலாம். 

2,3,4, விழுந்தால் கப்சப்பென்று அமைதியாய் இருக்க வேண்டும்.


ஏன்.?


1 - சூரியனைக் குறிக்கும்.

5 - நீர்,நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதங்களைக் குறிக்கும்.

6 - இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி என ஆறு பருவங்களைக் குறிக்கும்.

12 - பன்னிரண்டு ராசிகளை/மாதங்களை குறிக்கும்.


ஆக எதிரியுடன் போரிடும் முன்பு இந்த நான்கு அம்சங்களையும் ஆராய்தல் வெகு அவசியம். இதுவெல்லாம் சாதகமாய் அமைய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் முயற்சிக்க வேண்டும். அதனால்தான் Extra Chance.


அப்புறம், 


2 - இரண்டு அயனங்களை குறிக்கும். (உத்ராயனம், தட்சிணாயனம்)

3 - சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என மூன்று குணங்களை குறிக்கும்.

4 - அமிர்த,சித்த, மரண, பிரபலாரிஷ்ட என நான்கு யோகங்களை குறிக்கும்.


எதிரியின் குணம், மனமாற்றம், யோகம் இதெல்லாம் அறிந்து அக்காலத்தே அமைதியாய் இருக்க வேண்டும். Therefore, No second chance.


ஏதாச்சும் புரிஞ்சுதுங்களா..?


நாம் எல்லாரும் சகுனி ஆகிட முடியாது. தாயமும் ஆட முடியாது. ஆனால் நாமெடுக்கும் முடிவுகளில், பிற மனிதரோடு பழகுகையில், செயல்பாடுகளில், இவற்றிலெல்லாம் தீர ஆராய்தல் வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் போதுமானது. சில முடிவுகள் தவறாகவும் போகும். இருப்பினும் தாயம் போல வாழ்க்கை திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப, வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கும்.


1,5,6,12 போல் தவறுகளை திருத்திக்கொண்டு தொடர்வதற்கு.

2,3,4 போல் சிலவற்றை மீண்டும் தொடராமல் இருப்பதற்கு.


பிறகென்ன, நாமும் சகுனிபோல் சொல்லலாம், 


#தாயம்

"#சகுனியின்பகடை"

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...