Thursday, August 22, 2024

பிரான்சிஸ் டே 1638 ல் சென்னையை நிறுவிய தினம் இன்று.

 பிரான்சிஸ் டே 1638 ல் சென்னையை நிறுவிய தினம் இன்று. 


என்னைப் பொறுத்தவரை தொண்டை மண்டலத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று அழைக்கத் தகுதிவாய்ந்தவரான பூவை அஷ்டாவதானம் கல்யாண சுந்தர முதலியார் அவர்களை சென்னை தினத்தில் நினைவில் கொள்ள வேண்டியவர்.


 சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் பதிகங்களாக பதிவு செய்தவர்.


 திருவான்மியூர், திருவொற்றியூர், குன்றத்தூர், திருப்பாசூர், திருப்பாலை வனம்,  வேளச்சேரி, திருவலிதாயம்(பாடி), திருமுல்லைவாயில், பொன்னேரி, பூந்தமல்லி, ஆண்டார் குப்பம், காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போன்ற இன்னும் பலப்பல சென்னையைச் சுற்றியுள்ள கோவில் தலபுராணங்கள் மூலம் அன்றைய காலத்து சென்னை நிலவியல் அமைப்பினை தனது பதிகங்கள் வழியாக எழுதித் தள்ளியவர்.


1876ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுக்ரவாரம் 11:00 மணியளவில் முதன் முதலாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நகருக்கு ரயில் 🚆 விட்ட போது முதன்மையாக பயணித்த போது தனது ரயில் பயணத்தை பதிவு செய்தவர் பூவை அஷ்டாவதான கல்யாண சுந்தர யதீந்திரர்.


 சென்னை தினத்தில் இவரை நினைவு கொள்வோம்.



No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...