காது கேட்குதா ?
அரசும் மக்களும் -
#பாரதி , ' #ராஜ்யசாஸ்திரம் ' கட்டுரையில் சொல்லியது :
" குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப்படவேண்டும் .....
குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால் அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லோரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்ராயங்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கு உண்டு ...."
-#பாரதி கட்டுரைகள்
••••
அங்கு சட்ட சபையில்
வினாக்களை வீசியெறிவார்
அங்கு
உலகப் பெருஞ் சந்தை
கையில் பணமிருந்தால்
ஏதுதான் அங்கில்லை
இடமாற்றம்
வேலை உயர்வு
வியாபார சலுகைகள்
கொடுக்கப் பணம் இருந்தால்
படிக்க இடம் , படுக்க இடம்
சொல்லப் போனால்
நிதியிருந்தால் நீதியும் நின் வழி வரும்
எல்லாம் சட்டப்படி
எல்லாம் திட்டப்படி
அன்று முதல் இன்று வரை
நேற்றிலிருந்து நாளை வரை
“சரித்திரத்தின் சூழ்ச்சி நிறைந்த
வீதிகள்”
-#நகுலன்
••••
#என்_நிலை
( எங்கோ படித்தது…..)
அதிகாரமிருக்கும் இடத்தில்
மண்டியிடச்சொன்னார்கள்.
பணமிருக்கும் இடத்தில்
பல்லைக்காட்டச் சொன்னார்கள்.
திருப்பியடிப்பானெனத் தெரிந்தால்
ஒதுங்கிபோகச் சொன்னார்கள்.
நாளை காரியம் ஆகுமென்றால்
மௌனம் சாதிக்கச் சொன்னார்கள்.
எண்ணிக்கைப் பொறுத்து
நிலைப்பாடு எடென்றார்கள்.
கை ஓங்கும் பக்கத்தில்
கண்ணை மூடி நில்லென்றார்கள்.
குரல் எழுப்பாத வரை
குந்தகம் விளையாது என்றார்கள்.
இவ்விதிகளை பின்பற்றினால்
நன்மை பயக்குமென்றார்கள்.
ஓலமிடும் மனசாட்சியை
என்ன செய்வதென்றேன்.
அதைப்புதைத்த மேட்டில்தான்
இவ்விதிகளை வகுத்தோம் என்றார்கள்.
#ராஜ்யசாஸ்திரம்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-8-2024.
No comments:
Post a Comment