Thursday, August 22, 2024

ஒரு எழுத்தாளனுக்குக் கற்பனை வேண்டும்.

 ஒரு எழுத்தாளனுக்குக் கற்பனை வேண்டும். கற்பனை என்றால் கண்டதையும் சொல்வதல்ல. வாழ்வை அதன் சாரத்திலிருந்து எடுத்து வாழ்வு போல் ஒன்றை சிருஷ்டிக்கும் வித்தை. 


அது வாழ்வுதான். ஆனால், வாழ்வல்ல. வாழ்வைப் போல் ஒன்று. மானுட கற்பிதம். 


அதிலிருந்து வாழ்வுக்கான அர்த்தங்கள், செய்திகள் இறங்கி வரும். நேரடி வாழ்வில் எந்த செய்தியும் இல்லை. செய்தி சொல்வது வாழ்வின் நோக்கமும் இல்லை.  கலையில்தான் அது உள்ளது. அதை சிருஷ்டிப்பவனே கலைஞன். 


ஒரு நாளிதழ் செய்தி. ஓர் அடகுக் கடை கிழவியையும் அவளது சகோதரியையும் ஒரு கல்லூரி மாணவன் கோடாரியால் வெட்டிக்கொன்றுவிட்டான் என்றிருக்கிறது. 


கோடி பேர் அந்த செய்தியைப் படிக்கிறார்கள். அது போலவே தஸ்தாயெவ்ஸ்கியும் படிக்கிறார். அச்செய்தி குற்றமும் தண்டனையும் என்ற மாபெரும் நாவலாகிறது. இதுதான் மிடாஸ் டச். 


இப்படி ஒரு கரம் எழுத்தாளனிடம் இருக்க வேண்டும். அற்ப ஆயுள் கொண்ட நாளிதழ் செய்தியை சாகாவரம் பெற்ற இலக்கியமாய் மாற்றும் கரங்கள் அவை. 


இப்படித்தான் வாழ்விலிருந்து இலக்கியத்தைக் கற்க வேண்டும். இலக்கியத்திலிருந்து வாழ்வைக் கற்பிக்க வேண்டும். 


அந்த திராணி உள்ளவனையே நான் எழுத்தாளன் என்று சொல்வேன்.


@இளங்கோ கிருஷ்ணன்

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...