Thursday, August 22, 2024

சற்றுமுன் #திருநெல்வேலி_பாளையங்கோட்டை திருவனந்தபுரம் செல்லும்

 சற்றுமுன் #திருநெல்வேலி_பாளையங்கோட்டை திருவனந்தபுரம் செல்லும் சாலையில்  பிரிந்து தெற்கு பஜாருக்கு செல்லும் வழியில் லூர்த நாதன் சிலையைப் பார்த்தேன்.


சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு கொக்கிரகுளம் பாலம் -தாமிரபரணியில் கொல்லப்பட்ட  பாளையங்கோட்டை மாணவன் லூர்த நாதனின் நினைவாக திறக்கப்பட்ட சிலை! காமராஜர் அவர்கள் இந்தச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது கண்ணுக்கு முன்பாக  ஒரு கணம் வந்து போனது.


அங்கிருந்த சாவடி முன்பாக வைத்து திறக்கப்பட்ட இந்த சிலை திறப்பு விழாவில் காமராஜர், நெடுமாறன், செல்ல பாண்டியன், எஸ்.கே. டி. ராமசந்திரன், முன்னாள் ஜான்ஸ கல்லூரி கல்லூரி முதல்வர் வீரசிரோன்மணி,

சுதந்திரா கட்சி பெப்பின் பெர்னான்டோ போன்றவர்கள் எல்லாம் கலந்து கொண்ட காட்சி 50 வருடங்கள் ஆன பின்பும் கூட  நிழற்படம் போல என் கண்முன்னே அப்படியே நின்றது.பணி நிறைவு மாவட்ட நீதிபதி கோதண்டராம ராஜா நீதி விசாரணை கமிசன் என……


அந்த நினைவுகளுடன் கடந்தேன். காலம் மிக வேகமாக ஓடுகிறது!எத்தனையோ நினைவுகள்! 


#திருநெல்வேலி_பாளையங்கோட்டை

#லூர்தநாதன்சிலை

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

21-8-2024.

8.30

*****



நெல்லைசேவியர்ஸ் காலேஜ்  பிகாம் மாணவன் லூர்துநாதன் தாக்கி மரணம்


1972

சேவியர்ஸ் காலேஜ் கெமிஸ்ரி பிரபஸர் திரு ஏ.சீனிவாசன் அவர்களை காவல் துறை எதோ ஒரு விசாரணைக்கு பாளையங்கோட்டை மேடை போலீஸுக்கு அழைத்து சென்றார்களாம். 

அவரை அடித்து அவமானப்படுத்தி விட்டார்களாம். 

அதைக் கண்டித்து சேவியர்ஸ் கல்லாரி மாணவர்கள் ஸ்டிரைக். 

தகவல் மேலும் பல சிறகுகளுடன் ஒவ்வொரூ வகுப்பறை வகுப்பறையாக வேகம் எடுத்தது.

எல்லாம் பயமறியா இளம் கன்றுகளா இருந்திச்சு. பாலம் பக்கம் வந்தாச்சு.

அப்படியேத் திரும்பி கலெக்டர் ஆபிசு முன்னாடி வந்திட்டோம். கிட்ட வர வர கோஷம் சத்தமும் அதிக பலமாகக் கேட்டது.

கலெக்டர் சண்முக சிகாமணியை சந்தித்தோம்

சுலோசனா முதலியார் பாலம் முழுவதும் ஒரே ஆட்கள் தான். சும்மா கூட்டம் நிறைஞ்சி வழியது. 

போலீஸ்காரங்க லத்தி தட்டி எல்லாம் எடுத்திக்கிட்டு நிறைய பேரா வரிசையா நிற்க ஆரம்பிச்சாங்க. 

சுத்தி வளைச்சு நிற்க தொடங்கினாங்க. 

திடீரென்று தள்ளு முள்ளு ஏற்படுகிறது. கற்கள் பறக்கின்றன. லத்தி சார்ஜ் உத்தரவு வந்ததும் மாணவர்களை கலைக்க தடியடி நடக்கிறது.

மாணவர்களில் சிலர் சுலோசனா முதலியார் பாலத்தில் மாட்டிக் கொண்டார்கள். இருபுறமும் போலீஸ். அடி படாமல் மீறி வெளி வர முடியாது.

தப்பிக்க மேலே ஆத்துப் பாலத்திலிருந்து முப்பது அடிக்கும் கீழே ஓடும் ஆத்து தண்ணியில குதிக்கிறாங்க. பலருக்கும் அடி தடி காயங்கள்.

அரை மணியில் கூட்டம் கலையுது. 

பாதி மாணவர்கள் ஆங்காங்கே பதுங்கிக் கிடந்தவர்கள் மெல்ல வெளியே வருகிறார்கள்.

தண்ணீரில் முழுக்கை சட்டை பேண்ட் அணிந்த மாணவன் உடல் மிதக்கிறது.

ஐயோ போயிச்சே..இருந்த மாணவர்கள் திரண்டு தூக்கி வெளியே கொண்டு வருகிறார்கள்.

லூர்து நாதன்...ஹாஸ்டல் மாணவன் . மாணவர் ஸ்டிரைக்கால் உயிர் விட்ட நெல்லை சீமையில் முதல் மாணவன்.

மதியத்திற்குள் தகவல் திருநெல்வேலி முழுவதும் பரவியது. மரித்த லூர்து நாதனை திறந்த வண்டியில் தோள் சாய்த்து எடுத்து வரப்பட்டது.

பாளை மார்க்கெட் மைதானம் பக்கம் லூர்துநாதனை ஊர் வலம். கிட்டார் நன்கு வாசிப்பர். செந்த ஊர் சேலம்.

பெரிய கேரா முழுக்கை சட்டை..இன்னும் சொல்லப் போனால்.. நடிகர் ஸ்ரீகாந்த் மாதிரியான மீசை உருவமாய்த் தெரிந்தார்.

ஊர்வலம் கூடிக் கொண்டே நீண்டது. சரியாக ஆயிரதம்மன் கோவில் முக்கில் போலீஸ் வண்டி வந்து ஊர்வலத்தை நிறுத்தியது . 

சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ஊர்வலத்தைக் களைத்து லூர்துநாதனது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.

பல மாணவர்களுக்கு கல் வீச்சில் தடியடியில் காயம். போர்கோலமாய் காட்சியளித்தது தெற்கு வடக்கு பஜார்கள்.

அந்த ஆண்டு முழுவதும் தொடர் ஸ்டிரைக். மாணவர் விடுதியும் மூடப்பட்டது.

லூர்துநாதன் மறைவுக்கான அஞ்சலி நோட்டீஸ் என கல்லூரி மாணவர்களால் விநியோகிக்கப்பட்டது

 பின் ஒரு சில ஆண்டில் லூர்து நாதனுக்காய் பாளை ராமர் கோவில் எதிர்புறம் முனிசிபல் சிறுவர் பூங்காவில் கிழக்கு முகமாய் சிலை. 

கர்ம வீரர் பெருந் தலைவர் திரு காமராஜ் கையால் சிலை திறக்கப்பட்டது.

அன்றே வஉசி மைதானம் அருகே காமராசர் கூட்டமும் நடந்தது.

அன்றைய கால கட்டத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவன் உதயகுமாரின் மரணமும் திருச்சி St Joseph college Clive hostel incident,நெல்லை லூர்துநாதன் மரணமும் மிகப் பெரிய எழிச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சட்ட மன்றத்தில் பெரும் விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...