Thursday, August 15, 2024

பின்னையொருநாள்,,,

 


பின்னையொருநாள்,,, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி,, அரங்கன் கோவிலுக்கு வருகிறாள்,,,, அந்த திருநாளில்,, அவனுடன் கலக்கிறாள்,,, ! இப்போதோ,,,, கோதையவள் மடியில்,, கோவிந்தன் தலை சாய்த்துக் கிடக்கின்றான் ! பாம்பணையில் கிடந்த மகன் ! பஞ்சணையாய் கோதை மடி கிடைத்திருக்க,,, ! கோகுலத்துப் பிள்ளையவன் ! கோதையவள் தண்மடியில்,,,, கோமுட்டிக் குடித்த பாலமுதம்,,, கோதைதான் தருவாளோ ? கோவிந்தன் தானறியான் ! நீங்கள் அறிவீர்களா ? நீங்களும்,,நானுமறிய மாட்டோமே,,,,? விஷ்ணு சித்த பெரியாழ்வான் அறிவானோ ? என்றெண்ணி அவனிடம், பிள்ளை நான் கேட்டேன் ! ஒருமகள் தன்னை உடையேன் ! உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறஞ்செயும் கொலோ,,,,,,,,,,,,,, என்றே,, விஷ்ணு சித்தனெனும் பெரியாழ்வார் சொல்ல,,, கையது கொண்டு வாயது பொத்தி,, நிற்கின்றான் பிள்ளை,,, அனுமக்குரங்காய்,, இப்போது,,,, பிள்ளையின் பின்னால் நீங்களும் தானே ? திருவாடிப்பூரத்து நன்னாளில்…… திருக்காதல் ஒன்று பிறந்தது. ஆண்டவனையே ஆளும் ஆழ்ந்தடர்ந்த காதலது. உள்ளமுடல் இரண்டிலும் உயிர்த்திருந்த வேட்கையை அணைத்திட அரங்கனை அழைத்துச் சுடர்ந்தது. காமம் செப்பாது விடுத்துக் காதல் மட்டும் மொழிவதில் கடுகளவும் உளம் ஒப்பாது கனிவுற்ற மெய்க்காதலது. கன்னித்தமிழ்த் தீஞ்சொல் கண்ணிகளால் மாயோன் கண்ணனைக் கட்டியிழுத்துக் காதலுற்ற மாயக்காதலது. மாயனை திருமாலனை நாடி மலர்சூடிக் கொடுத்த பைங்கொடி ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த திருக்காதல் பெருமாட்டி வாழிய ! அருங்கோதைத் திருவாட்டி வாழிய ! அரங்கன்மடி அமர்சீமாட்டி வாழிய !2/2

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...