Thursday, August 15, 2024

மாயோன் மேய காடுறை உலகமாக இருந்த காலம் அது !

 மாயோன் மேய காடுறை உலகமாக இருந்த காலம் அது !

மல்லி எனும் நிலப்பரப்பினை வில்லி எனும் மன்னன் ஆண்ட ஊரும்,,அது !


காலம் கி.பி 716

ஆடி மாதத்திய பூர நட்சத்திர நாள்,,,,

சுக்கிரன் எழுகின்ற வேளையதில்,,

குரு விடைபெறுகின்ற வேளையும்,,,அதுவாக,,,


அந்நாள் ,,,

எட்டாம் நூற்றாண்டின் அற்புதநாள்,,, !


அந்நாளுக்கு சில வருடங்களுக்கு முன்னொரு நாளில்..

புத்தூரில்,,

வில்லி மன்னன் ஆண்ட வில்லிப்புத்தூரில்,,,

விரஜையெனும் பெண்ணுக்குத்  திருமணம் ஆகிறது !


மணமகனாக,,,

மூங்கில் குடி மரபில் வந்த முகுந்தபட்டர் -பத்மவல்லி தம்பதியரின் மகன் விஷ்ணு சித்தன் !


புகழ்மின்  !

தொழுமின் !

பூப்புமைமின் !

 என்னும் மாணிக்க வாசகத்துக்கு இலக்கணமாக,,


மலையடியில்,,

நதிக்கரையில்,,,

 நந்தவனத்தில்,,,மலர்ந்திருக்கும் மலரெல்லாம்,,

மாலவனுக்காக,,,

மட்டுமேயென்றெண்ணி,,

மலர் பறித்து மாலை கட்டி,,,

பூமாலை கட்டி,,, சாற்றுவதே நங்கடனென்று வாழ்கின்றார் விஷ்ணு சித்தர்,,,,,,,,,,,


ஆலிலை என்கிற வடபத்ரத்தில்,,,

பள்ளி கொண்டிருக்கிற பெருமானுக்கு,,,

பூமாலை மட்டும்,,,போதுமோ ? 

அவ்வப்போது,,கொஞ்சம் பாமாலையும்,,பாடுகிறார் !

தமிழ்ப் பாமாலையும்,,பாடுகிறார் !


காலங்கள் கடக்கிறது!

பாமாலை பாடினாலும்,,

பூமாலை சாற்றினாலும்,,, பலனொன்றுமில்லையடி ,,

நமக்கென்று ஒரு பிள்ளை  இன்னுமில்லையடி விரஜாய்!


நமக்கென்று ,

ஒரு பிள்ளை வந்தாலன்றி பயனொன்றுமில்லை அய்யனே !


விரஜைக்கு வலி !

விரஜையின் கணவன்  !

விஷ்ணு சித்தனுக்கோ வலியோ வலி !!


பெண் அழுது விடலாம்,, !

ஆண் அழுது விட்டால்,,,? 

ஊர் சிரிக்கும்,,உலகு சிரிக்கும்,, எக்களிக்கும்,, !


ஆனாலும்,,வழியில்லை,

வேறு வழியில்லை,,, 

விரஜையிடமே அழுது விடலாம் !

அவளிடம் கொட்டுவதன்றி வேறு எவரிடமும் 

கொட்டிப் பலனில்லை,,,


அவன் !

அரங்கனவன் !

வடபத்ர சாயி !

  ஆலிலைப் பள்ளிகொண்டான் !

மெளனமாய்ச் சிரிக்கின்றான் !


அப்போதிலொரு நாள்,,,!

விஷ்ணு சித்தன் வடபத்ரசாயியின் நந்தவனத்தில் துழாய் கொய்து கொண்டிருக்கின்றான் !


ஒரு அழுகுரல்,,

இல்லை,,அது ஆனந்த குரல்,,,,,


ஒரு கிளிக் குரல் !

இல்லையில்லை...

ஒராயிரம் கிளிக்குரல்கள் !


இல்லையடா,,,,

இது பிள்ளையின் குரல்,, !

இல்லையில்லை,,

இது கிள்ளையின் குரல்,,, !


எங்கிருந்து வருகிறது ?

எங்கிருந்து கேட்டாயோ ?

அங்கிருந்தே ? வருகிறது ! மனம் சொன்னது !


இது கீதை அல்லவா ?

இதைச் சொன்னவனும்,,அவனே அல்லவா ?

மனம் தவிக்கிறது !

மனம் பரிதவிக்கிறது !


வாராது போல வந்த மாமணி !

என் கண்ணின் கருமணியின் குரல்,,, !

குரல் வந்த திக்கினை நோக்கி,,,

விஷ்ணு சித்தன் ஓடுகிறான் !


அடர்ந்த

நாற்றத் துழாய் மரத்தினடியில்,,,


அடர்ந்த 

நாற்றத் துழாய்ச் செடியின் அடியில்,,,


ஓர் நிலவு !

ஓர் சூரியன் !

ஓர் பிறை,,

ஓர் வாசம்,, !

ஓர் ஆனந்தம் !

அத்தனையும்,,,,ஓர் உருவாய்,,,,


அள்ளி எடுக்கின்றார் !

அள்ளி அணைக்கின்றார் !


நிலம் உழுத கணத்தில்,,,

ஜனகனுக்கு சீதை கிடைத்தாள் !


கலம் நிறைக்க துழாய் பறித்த கணத்தில்,,

விஷ்ணு சித்தனுக்கு கோதை கிடைத்தாள் !


ஆஹா,,, !

வெள்ளி எழுகின்ற வேளையது !

வியாழன் உறங்குகின்ற வேளையது !

நன்னாள் !

இன்று ஆடிப்பூர நன்னாள் !


கோதையெனும்,,

குலக்கொடி கிடைத்த பொன்னாள் !


திருக்கண்டேன் !

திருவே கண்டேன் !

மருக் கண்டேன் 

மருப் பொழில் வாசம் கொண்டேன் !


விஷ்ணு சித்தன் ,,

கைப்பிள்ளையதை வளர்க்கின்றார் !


அக்கிள்ளையும்,,,வளர்கிறது !

கிளி மொழி பேசுகிறது !

கிள்ளை மொழி பேசுகிறது !


இப்போதெல்லாம் !

விஷ்ணு சித்தனின் பூமாலை  மணக்கிறது !

பூமாலை மட்டுமா ? பாமாலையும் கூட வாசம் வீசுகிறது 


விஷ்ணு சித்தன் !

பெரியாள் ஆகிறார் !

பெரிய ஆழ்வார் ஆகிறார் !


கோதிலா குலக்கொடி,,,

தந்தை கட்டி வைத்த அரங்கனுக்கான மாலை அழகாய் இருக்கிறதா ?

அணிமணிகள் அவனுக்குச் சரியாக இருக்குமா ?

பூமாலைக் குஞ்சலங்கள் அவனுக்குப் போதுமோ ?


இன்னும் கொஞ்சம்,,,

நெருக்கிக் கட்டி இருக்கலாமோ ?


,,,

ம்ஹூம்,,,

வேண்டாம்,,,வேண்டாம்,,இது போதும்,,,


அவனுக்கு,,

ஆலிலையானுக்கு,,,

வடபத்ரசாயிக்கு,,, கனக்குமோ ?


பூமாலை கனக்குமோ ?

அவன் கழுத்து வெண் சங்கு கழுத்தாயிற்றே,,?

அவனதைத் தாங்குவானோ ?


கேள்விகள் எழுகிறது !

கோதைக்கு,,,


அவனுக்கு, அவனுக்காக மட்டுமே கட்டி வைத்த பூ மாலைதனை 

அவள் சூடிக் கொள்கிறாள் !


ஆடியின் முன் நின்று ஆடி பார்க்கிறாள்,, !

அழகாய்த்தான் இருக்கிறது !

அழகன் அவனுக்கும் அழகாய்த்தானிருக்கும்,, !


அவள் சூடிய மாலையை,,

அவனுக்காக அனுப்புகிறாள்,,, !


அதன் பிறகு நடந்ததெல்லாம்,,,

உங்களுக்குத்தான் முழுதாய்த் தெரியுமே ?1/2


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...