Wednesday, September 4, 2024

ஆடுகளங்கள் மாறலாம்

 ஆடுகளங்கள் மாறலாம்

உன் போராட்டம் ஓயாதென

புரிந்துகொண்டு

கலங்காதிரு மனமே...



உன் மீது புறணிகள் ஓயாதென...


உன்னாற்றல் பற்றியோ

உன்னெழுத்து பற்றியெல்லாம்

அக்கறையில்லை எவருக்கும்

உன்னொழுக்கம் காக்க

கங்காணிகள் இருக்கிறார்களென்று...


சுயமுமும் சுதந்திரமும்

உன் கேடயங்களென

கேட்பவருக்கு உரைத்து

கேள்வியைத் திருப்பு...


உன் சுதந்திரம் என்பது

உனக்கானவை மட்டுமே

எவரும் நுழைந்து

எதிர் கருத்திட இடமில்லையென்று பரப்பு...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்