தொலைதூரம் தொலைந்த வானம்,
தொலைந்த வாழ்க்கை,
தொலைந்து போன கனவு.
தொலைந்த பார்வை தீராத ஏக்கம்.
தொலைந்த ஒட்டிய உறவு,
பரந்து விரிந்த வாழ்க்கை
நொந்து கடக்கும் மனிதம்
என்ன நினைந்து என்ன? ஒன்று கூடிப் பேசிக் கலந்து உள்ளப் பிரிதல் கவலை கூடும் பண்பு தானே!
நாளை திரும்பும் வாழ்க்கை ஒவ்வொரு முடிவுக்கு பின்பும் ஒரு புதிய ஆரம்பம் உள்ளது..
தேவையற்ற இடங்களில்
பிம்பங்களை சுமக்காதீர்கள்.
நீங்கள் உடைந்து விடுவீர்கள்........!
பை பை ஆகஸ்ட்
---------------------------------------------
வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்டப் பிறகு தான் தெரிகிறது யாரோடும் யார் வாழ்க்கையும் முடிந்து போய் விடுவதில்லை.
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தேயாக வேண்டும்.இது தான் வாழ்க்கை.நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை.கூட வரப்போவதும் எதுவுமில்லை.
ஆகவே எதன் மீதும் அதிகப் பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் பற்றுதல் துன்பத்தைக் கொண்டு வருகிறது.
வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைக்கும் சலுகை. அதைக் கவனமாக செலவு செய்வதே சிறந்தது.
சில நேரங்களில் வாழ்க்கையில் .நாம் செய்யும் தவறுகளும் தான். அதனால் சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.
செயல்படும் போது உறுதியோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்
No comments:
Post a Comment