Wednesday, September 4, 2024

#என்நிலை_எனதுபாடுகள்

 #என்நிலை_எனதுபாடுகள்

———————————-

எனக்குள் இருந்த ஏதோ ஒரு இயல்பு நான் அரசியலுக்கு வர காரணமாயிருந்தது. பிறர், நான் இதில் சிலரின் வஞ்சகத்தால் வெற்றி பெற வில்லை என சொல்கின்றனர். ஆனால் இதன் தளத்தில் நான் வெற்றியை ஈட்டிய மகிழ்ச்சியான சுதந்திர தனி மனிதனாக  இருக்கிறேன்.


உங்களுக்குள் இருக்கும் மனிதனை மற்றும் சூழலை உணர்ந்து கொள்ளுங்கள். போகுமிடம்  இலக்கும் வெகுதூரமில்லை. இதுவே எனது இருத்தல் இயல்.

••••



விழிப்பாக இருங்கள். ஆனால் மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன் படுத்திக்கொள்ள துவங்கி விடுவார்கள். அதன்பிறகு அவர்கள் உங்களைக் கையாளவும், நிர்வகிக்கவும் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான்.


உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால்... உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்கவேண்டும், என்று எதிர்பார்க்கப் படுவீர்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் வற்புறுத்தலில் தான் முடியும்.


உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால்... நீங்கள் அதிக சாமர்த்தியமுடையவராக, மிகுந்த திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால்... இந்த சமூகத்தினால், உங்களின் ஆக்கம் (Output) வீணாக்கப்பட முடியாது.


நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ள ஒருவராக இருக்க முடிந்தால்... பிறகு, நீங்கள் அடுத்தவருக்காகவே வாழவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவீர்கள். ஆனால் பயனற்றவாராக இருந்தால்.... யாரும் உங்கள் "இருத்தலை" (presence) திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்!! உங்களை கண்டுக்கொள்ளவும் மாட்டார்கள்!!


உங்களின் குடும்பத்தினரால்.... இந்த சமூகத்தால்.... நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்!! இங்கு "'பயனற்ற தன்மை" (Futility) என்பது தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும்" பெற்றுள்ளது.


அதன்பின், நெரிசலான சந்தைப் பகுதியில் கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். அந்த தனிமையில் உங்களின் தியானத் தன்மை வளரும். உங்கள் முழுச் சக்தியும் உள்நோக்கிச் செல்லும்..... நீங்கள் மேலும் உங்களின் அசல் "இருப்பை" நோக்கி செல்வீர்கள்!!


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

29-8-2024.

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...