எது இன்பம், எது துன்பம், எது தேவை, எது தேவையில்லை என்று நினைக்கும் தன்மை அப்போது எனக்கு இருந்ததில்லை. ஆனால் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்து... ஆம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்து.
வாழ்க்கை வேறு வாழ்வு வேறுதானே?
ஆயினும் கடந்து வந்த சில பாதைகள் முட்டி, மோதி, சில சமயங்களில் சிதைத்து இருந்தாலும் நான் வாழ்ந்து கடந்து கொண்டேதானிருந்தேன்!! சற்றே சில வேளைகளில் தளரும் நொடிகள் வந்தாலும்... என்னையும் அறியாமல் உடனே நின்று, வென்றும் விடுவேன். இதனை நான் உணரவே பல வருடங்கள் ஆகியுள்ளது!
சிறு வயது முதலே பழக்கப்பட்ட ஒரு வரி.. "YOU ARE A STRONG".!! அப்போதெல்லாம் கேட்கும் சாதாரண ஒரு வரி அது எனக்கு...சில சமயம் மிகவும் எரிச்சல் அடையச் செய்த வரியும் அதுவேதான்.
கேட்டுக் கேட்டு பழக்கப்பட்டதாலோ என்னவோ பல தருணங்களில் அவ்வாறே பிரதிபலிக்கும் என் கண்ணாடியும் கூட இவ்வரிகளைத்தான்.
உனக்கென்ன நான் தனியாக பெயரிட்டழைப்பது,
"நம்பிக்கை"
"Confidence is the only key for all your Locks"...Strong men are not made in a day!!
#confidence #strength You
No comments:
Post a Comment