#டெல்லி_சங்கதி
——————————
ஒரிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு காங்கிரஸ் பக்கம் கிடைக்க ராகுல் காந்தி ஆவலாக இருக்கிறாராம். அவருடைய தந்தை பிஜு பட் நாயக் முதலில் காங்கிரஸிலிருந்து இந்திரா அம்மையாரின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்று விலகி வந்தவர்தான். பிறகு ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் ஒரு காலத்தில் நேரு அவர்களுக்கு விமானம் ஓட்டியவர். இவர்தான் திமுக- அதிமுக இணைய சேப்பாக்க அரசு விருந்தினர் விடுதியில் கலைஞரை எம்ஜிஆரை சந்திக்க வைத்தார்.அவரது மகனான நவீன் பட்நாயக் “நான் எப்போதும் தனியாகத்தான் இருப்பேன்! தனியாகத்தான் தேர்தலில் நின்று முதல்வர் ஆனேன்.!
கடந்த 50 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்த நடவடிக்கைகள் தொந்தரவுகள் தவறான முடிவுகள் அனைத்தும் எங்களுக்கு தெரியாததா என்ன? இன்றைக்கு அரசியல் சாசனத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரிகிறார்கள்! அதைப்பற்றிப் பேசுகிறார்கள்! இந்த அரசியல் சாசனத்தை ஒழித்துக் கட்டியவர்களே அவர்கள் தானே”! என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்!
மேற்குவங்க மம்தாவும் ராகுல் காந்தியை காங்கிரஸை ஏற்றுக்கொள்ளவில்லை! கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பிரனாராயே ராகுல் காந்தியை பப்பு தத்தி என்றெல்லாம் சொன்ன பிறகு அதாவது இப்படியான சொற்கள் மறுப்புகள் எல்லாம் வரும்போது எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது! வேண்டுமெனில் சில திமுக போன்ற மாநிலங்களில் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சில இடங்களில் வெற்றி பெறலாம்! அதுதான் வரப்போகும் காலத்திலும் காங்கிரஸின் நிலைமை! என்பதாக இருக்கிறது டெல்லித் தகவல்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-10-2024.
No comments:
Post a Comment