இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.
1982-ல் பிரபாகரன் கைதானவுடன் நெடுமாறன் கலைஞரிடம் சொன்னாராம், கலைஞர் ஜெ.அன்பழகனிடம் சொன்னாராம், ஜெ.அன்பழகன் திமுக செய்தி தொடர்பாளரான என்னிடம் சொன்னாராம். பின்னர் பிரபாகரனை ஜாமினில் எடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்களாம். எம்ஜிஆர் அரசு பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தார்களாம். இந்த தவறான பதிவு Link https://x.com/MyNa_Writes_/status/1857767248192221321?s=08
உங்கள் தலைவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எனக்கென்னன்னு எதையாவது எழுதினால் அதை நம்ப இப்போதுள்ள திமுகவினர் தயாராக இருப்பார்கள். டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றோர் இப்போதும் இருக்கின்றனர். எழுதும் முன் பார்த்து எழுதவும்.
1. 1982-ல் ஜெ.அன்பழகன் மா.செயலாளரே அல்ல, நெடுமாறன் கலைஞரிடம் கேட்கவில்லை. நான் 1982-ல் திமுகவிலேயே இல்லை. அப்புறம் எங்கே செய்தி தொடர்பாளர் ( திமுகவின் முதல் செய்தி தொடர்பாளர் நான் தான் அது 90 களுக்கு மேல்).
2. நெடுமாறன் கண்ணதாசன் நான் உட்பட காங்கிரஸிலிருந்து விலகி தமிழ்நாடு காங்கிரஸ் என்கிற கட்சியை அப்போது நடத்தினோம் நான் அதில் பொதுச்செயலார் இருந்தேன். நான்கு-ஐந்து
சட்ட மன்ற உறுப்பினர்கள்.
3. கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் அறிமுகமே 1986-ல் எனது திருமணத்தில்தான் நடந்தது. ஜூனியர் விகடனில் நான்தான் அறிமுக படுத்தினேன் செய்தியாக வந்தது. என்னுட
4. பிரபாகரன் கைதானப்பின் நான் தான் ஜாமீனில் எடுத்தேன். மதுரையில் கண்டிஷன் பெயிலில் நெடுமாறன் வீட்டில் தங்கி கையெழுத்து இட்டு வந்தார். முகுந்தன் சென்னையில் கண்டிஷன் பெயில். எம்ஜிஆரிடம் பிரபாகரனை அழைத்துச் சென்றதும் நானே. அவர் இல்லத்தில் ஜானகி அம்மையார் கையால் சமைத்த உணவை சாப்பிட்டோம். எம்ஜிஆர் விடுதலை புலிகளுக்கு உதவியது நாடே அறியும். கலைஞருக்கு முன் பிரபாகரன் எம்ஜிஆருக்குத்தான் அறிமுகம். அவர் பிரபாகரன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தது வரலாறு.எம்பியாக இருந்த
ஜெயலலிதா 1984 இல் பார்க்க விரும்பி முதல்வர் எம்ஜிஆர் சொல்லி அழைத்து சென்றேன். அப்போது போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா குடி வரவில்லை.பாண்டி சம்பவத்தில் 1982 தம்பி பிரபாகரன் சென்னை மத்தியசிறையில் இருந்த போது அன்றைய வை. கோபால்சாமி (வைகோ)அழைத்து சென்று அறிமுகம் செய்தேன்.
நெடுமாறன் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். விட்டால் இன்னும் பல கதைகள் திரிப்பார்கள். இதையெல்லாம் திராவிட மாடல்னு ஒரு கூட்டம் நம்பிகிட்டு திரியுது. என்னத்த சொல்ல காலத்தின் கோலம். இந்த கடந்த கால எனது பதிவுகள் இன்னும் உள்ளது . இங்கு எங்கு ஜெ. அன்பழகன் வந்தார். ஒரே சென்னை மாவட்ட திமுக செயலார் அப்போது ஆர.டி. சீதாபதி பின் டி.ஆர். பாலு வந்தார். அப்போது ஜெ. அன்பழகன் எந்த தொடர்பும் இல்லை. நெடுமாறன் கலைஞருக்கு சரியாட நட்பே இல்லை. நெடுமாறனின் தமிழ்நாடு காங்கிரஸ(கா) அன்று அதிமுக கூட்டணியில் இருந்தது
இன்றும் இதற்க்கு சாட்சிகள் பத்திரிகையாளர்கள்
ராவ்(ஜூவி) ஆங்கில டி. எஸ். சுப்பிரமணியன், எக்ஸ்பிரஸ் கணபதி, தினமணி கே. வைத்தியநாதன்,
கல்கி ப்ரியன், பகவன்சிங் என பலர் இன்றும் உள்ளனர்
என் பழைய பதிவுகள்:
(1)
(2)
No comments:
Post a Comment