தலைவர் கலைஞர் அவர்களின் மருமகனும், முரசொலி மாறன் அவர்களின் உடன்பிறந்த சகோதரருமான அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள் , இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் .
பெங்களூரில் இருந்து அன்னாரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது…
அவரின் அண்ணன் முரசொலி மாறன் போல என் மீது அன்பு கொண்டவர். இன்று வரை மாதம் இரு முறையாவது இன்றைய அரசியல் நிலவரம் குறித்து செல் பேசியில் பேசிக்கொள்வோம்.
என்னை திமுகவில் இருந்து இடைக்காலமாக நீக்கியது அவருக்கு உடன் பாடு இல்லை என வருத்தமாக சொல்வார். நான் செல்வமிடம் எனக்கு நீக்கம் நல்லதான். இப்போது அமைதியாக உள்ளேன் என அவரிடம் விடுங்கண்ண என சொல்லும் போது; கலைஞர் உங்களை இப்படி விடுவரா என சொல்வார்.
நுண்மாண் நுழைபுலம் கொண்டவர். தனிப்பட்ட இழப்பு எனக்கு.
ஆழ்ந்த இரங்கல்.
#முரசொலிசெல்வம்
#mursoliselvam
#dmk
#திமுக
No comments:
Post a Comment