Thursday, November 14, 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று



———————————————————- 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து.
இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி
யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,
வன்னி 6. எம்பிக்கள்,
திருகோணமலை 1.  அல்லது   2
மட்டக்களப்பு 3 அல்லது 4
அம்பாறை 1
ஆக. ஈழத்தில் 17   எம்பிக்கள்சா த்தியம்    உண்டு.

இதனைவிட.  மலையக.   தமிழ்    சகோதரர்
கள்   கண்டி    பதுளை   நுவரெலியா
தலைநகர் கொழும்பு   ஆகிய.   மாவட்டங்களில்    இருந்து   ஒரு   பத்துப்பேர் வரலாம்
எப்போதுமே    மலையக.   தமிழர்கள்
பூர்வீக.   தமிழர்களுடன்   ஐக்கியமாகவே
வாழ்க்கை.
மலையக.  மக்கள்   200. வருடங்களுக்கு
முன்பு 1823 இல்  தமிழ்நாட்டில்    இருந்து 
குடியேறியவர்கள்.
அதனால்    அரசாங்கம்   அவர்கள்
பற்றி   அக்கறை    மிக.  குறைவு.

தேர்தலுக்கு    முன்பு    மலையக
மக்களின்   வாழ்க்கை   நிலமைபற்றி
ரொம்பவும்    வேதனைப்பட்டு
அனுரகுமார.  பேசினார்.
பொறுத்திருந்து   பார்ப்போம். 
தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.







இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டன.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, மிகவும் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வந்த பல மூத்த அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான சுயேச்சைக் குழுக்கள் இந்த முறை களத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.


இந்தத் தேர்தலில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கென 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354. இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




விளம்பரம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES
14 நவம்பர் 2024, 02:11 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
பிற்பகல் 1 மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 36%, நுவரெலியாவில் 55%, கண்டியில் 36%, இரத்தினபுரியில் 50%, பதுளையில் 50%, கேகாலையில் 48%, திகாமடுல்லையில் 38%, மொனராகலையில் 44%, மாத்தறையில் 46%, முல்லைத்தீவில் 42%, கிளிநொச்சியில் 41%, குருநாகலில் 30%, மாத்தளையில் 46% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
விளம்பரம்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டன.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, மிகவும் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வந்த பல மூத்த அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான சுயேச்சைக் குழுக்கள் இந்த முறை களத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?
இந்தத் தேர்தலில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கென 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354. இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.
தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதியின் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்னவாகும்?
12 நவம்பர் 2024
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி இளைஞர்கள் கூறுவது என்ன?
11 நவம்பர் 2024
இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்ட பிறகு, பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு, மூன்றே அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு தினசரி பணிகள் நடைபெற்று வருகின்றன.
அநுர குமார திஸாநாயக்கவை பொறுத்தவரை, அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத் தான் விரும்பிய அமைச்சரவையை அமைக்க விரும்புவார். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுப்பது, தங்கள் கட்சி ஆட்சியமைக்க முயல்வது ஆகியவையே நோக்கமாக இருக்கும்.
ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரம் ஆகியவையே முக்கியமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து, சற்றே மீண்டு வந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரம் மேம்பட்டு, விலைகள் குறைய வேண்டும் என்பதுதான் முக்கியமான எதிர்பார்ப்பு.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?
"இலங்கையின் வாக்காளர்களிடம் பொதுவாக, பொருளாதார நிலை மேம்பட வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, வேலை வாய்ப்பும் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் இந்த விவகாரம் தீவிரமாக எதிரொலிக்கிறது. சிறுபான்மை மக்களிடம் 13வது சட்டத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது"

"தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, இனப் பிரச்னைகள் தொடர்பான கவலைகள் இருக்கின்றன. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் முக்கியக் கட்சியான ஜே.வி.பி. இன்னமும் அதை ஒரு மனிதாபிமானப் பிரச்னையாகவே பார்க்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் இன்னும் 13வது சட்டத் திருத்தம் தேவையில்லை எனப் பேசுகிறார்கள். மேலும் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் ராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இதையொட்டி அமைந்த ராணுவ வளையங்கள் பல கிராமங்களை ஊடறுத்துச் செல்கின்றன. இலங்கை ராணுவத்தின் பெரும் பகுதி வடக்கு - கிழக்கு பகுதியில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பகுதியில் ராணுவ மய நீக்கம் முக்கியமான பிரச்னை" என்கிறார் அவர்.
வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரை, பல சுயேச்சைக் குழுக்கள் களத்தில் நிற்பதால் ஒரே கட்சியே பெருமளவு இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்த முறை குறைந்திருப்பதாகவும்,
வாக்குப் பதிவு மாலை நான்கு மணியளவில் முடிந்துவுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாகத் துவங்கும். அடுத்த நாள் பிற்பகலுக்குள் பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியான அநுர குமார திஸாநாயக்க சரியான திசையில் செல்வதாகத் தோன்றினாலும், புதிய நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட பிறகே அவர் எந்த அளவுக்குத் திறம்படச் செயல்படுகிறார் என்பது குறித்த முடிவுக்கு மக்களால் வர முடியும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...