Wednesday, November 13, 2024

எது வெற்றி?

எது வெற்றி? மகிழ்ச்சியாக வாழ்வது, அடிக்கடி மனம்விட்டுச் சிரிப்பது, சான்றோரின் நன்மதிப்பையும் மரியாதையையும் வென்றெடுப்பது, குழந்தைகளின் அன்புக்குரியவராகத் திகழ்வது, நேர்மையான விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெறுவது, முகமூடியணிந்த நண்பர்களின் துரோகங்களைப் பொறுத்துக்கொள்வது, அழகான விஷயங்களை எப்போதும் வியப்பது, மற்றவரிடத்துச் சிறந்ததையே காண்பது, இவ்வுலகை இன்னும் கொஞ்சம் மேம்படுத்துவதற்குப் பங்களிப்பது- அதுவோர் ஆரோக்கியமான குழந்தையாக இருக்கலாம், செழிப்பான தோட்டமாக இருக்கலாம், அவலமான சமூக நிலையை மீட்டெடுக்க உதவியிருக்கலாம்- நீங்கள் மடியும்போது உங்களால் இந்த உலகம் சற்றே மேம்பட்டிருக்கட்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னொரு உயிருக்கு உங்களது இருப்பு அமைதியையும் ஆசுவாசத்தையும் வழங்கியிருக்கட்டும். இவையே உண்மையான வெற்றி! - எமர்சன்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்