ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ, அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ,...
அப்படி ஒர் நிலை வருமா? இங்கு மனித கூட்டங்கள் அப்படி சிந்திப்பது இல்லை.
ஒவ்வொரும் தங்கள் குடும்ப தன் நிலை நலன்களை நினைந்தால் தன், தன உடல் நிலைதான் முக்கியம்.
உடல் ஏன் சோம்பலாக மாறுகிறது? ஒருவேளை, நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருக்கலாம்; அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபட்டு இருக்கலாம். முந்தைய நாள் உடலை இறுக்கமாகவும் மந்தமாகவும்
மாற்றும் செயல்களைச் செய்திருக்கலாம். எனவே, உடல், சிறிது நேரம் அமைதியாக இருக்க விரும்புகிறது; தனியாக இருக்க விரும்புகிறது. ஆனால் நாம் அதை அனுமதிப்பதில்லை; அதை எப்பொழுதும் சுறுசுறுப்பாக
இருக்க செய்ய விரும்புகிறோம்.
ஆனால் நாம் நமது வாழ்க்கை முறையை சரி செய்ய முனைவதில்லை. எனவே சுறுசுறுப்பாக இருக்க மருந்து எடுத்துக்கொள்கிறோம். ஆனால் ஆழ்ந்து கவனித்தால், உடலுக்கென்று சொந்த புத்திசாலித்தனம்
இருப்பதை காணலாம். உடலின் நுண்ணறிவைக் கவனிக்க அதிக நுண்ணறிவு தேவைப்படுகிறது.
நாம் அதை கட்டாயப்படுத்துகிறோம்; அதை கட்டுப்படுத்துகிறோம். நம் உடல் இறைச்சி, குடிப்பழக்கம், புகைபிடித்தல் ஆகியவற்றுக்குப் பழகி இருக்கிறது. எனவே உடல், அதற்குரிய உள்ளார்ந்த
நுண்ணறிவை இழக்கிறது. உடலை புத்திசாலித்தனமாக செயல்பட அனுமதிக்க, மனம் புத்திசாலியாக மாற வேண்டும், உடலின் இயக்கத்தில் அது தலையிடக்கூடாது. முயற்சி செய்து பாருங்கள், சோம்பேறித்தனம்
மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
#வாழ்வியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-10-2024.
No comments:
Post a Comment