Thursday, November 14, 2024

சீர் மிகு வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம் தான் நமக்குக் காட்டுகிறது இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது.

 சீர் மிகு வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம் தான் நமக்குக் காட்டுகிறது இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது.

முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும் ஏனெனில் ரசனை தான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.

குடும்பத்தின் மகிழ்ச்சி நம் கையில் தான் இருக்கிறது இந்த உண்மையைச் சிலர் உணர்வதே இல்லை அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே சிலர் போர்க்களமாக்கி விடுவார்கள்.

அப்படியே நாளும், பொழுதும் போராடிக் கொண்டிருப்பதில் என்ன மகிழ்ச்சி. 

தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக் கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கி விடும் அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும்.

கனிவாகப் பேசும் கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதில்லை அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை. 

ஒருவரை ஒருவர் மதிக்கின்ற குடும்பத்தில் தான் சமத்துவம் இருக்கும், சந்தோஷம் பெருகும் அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் வளர்வார்கள்.

கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். 

வெளியிடங்களில் மற்றும் அலுவலகத்தில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசி விட்டு வீட்டிற்குள் நுழையும் போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் காட்டாதீர்கள் அது உங்கள் வாழ்விற்கு நீங்களே செய்கின்ற துரோகம்.

குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அப்போது பதற்றம் அடைய வேண்டாம் இருவரும் அமர்ந்து நிதானமாகப் பேசுங்கள் பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.

அதை விட்டு விட்டு மூன்றாம் நபரிடம் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளைப் பேசாதீர்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டு ஆவலாய்க் கேட்பார்கள் உங்கள் குடும்பத்தை இரண்டு துண்டாக்க என்னென்ன யோசனைகள் தர முடியுமோ அதையெல்லாம் தருவார்கள் அப்படி தான் பல குடும்பங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதைந்து போகின்றன.

ஜாக்கிரதையாக இருங்கள் உங்கள் குடும்பத்தை அதிகதிகமாக நேசியுங்கள் அது தான் மிகப் பெரிய பலம். 

குடும்பத்தை நேசிக்கின்றவர்களால் தான் உலகத்தை நேசிக்க முடியும் உலகத்தை நேசிப்பவர்களால் தான் நல்ல உறவுகளை உருவாக்க முடியும்.

'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள் முன், பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள் பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள் அப்படிப்பட்டவர்களால் கணவன்,மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன.

உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள். 

குடும்ப வாழ்வைக் கொண்டாடுங்கள் தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவியுங்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருங்கள் உங்கள் இல்லறம் செழிக்கும் வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்.


#வாழ்வியல்



#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

8-10-2024.

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...