இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?
இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் உருவாக்குகிறார்கள். கைப்பிடித்து, வழி நடத்தி விலகிச் செல்லுங்கள் என்று இளையவர் உதயநிதி ஒரு கூட்டத்தில் சொல்கிறார். ஆனால் கைப்பிடித்து வழி நடத்த கரம் நீட்ட அனுபவஸ்தர்கள் வந்தால் கையை தட்டி விட்டு அல்லவா செல்கிறீர்கள். பணக்கார முதலாளி வீட்டு பிள்ளைகள் பொது நிகழ்ச்சியில் கண்டபடி ஆடும் ஓடும் பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்கும். வேலைக்காரர்கள் மனதுக்குள் பொருளின் மதிப்பு தெரியுதா பார் என முனகிக்கொண்டு தடுக்க முடியாமல் சிரித்தப்படி வேடிக்கை பார்ப்பார்கள். அதுப்போன்றதொரு மன நிலையில் திமுகவில் இவர்கள் சொல்லும் இளையோர் எல்லா பர்னிச்சர்களையும் உடைக்க அனுபவஸ்தர்கள் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் சாம்சங் போராட்டம். சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர் மீதான அடக்குமுறைகள் கேள்விக்கேட்க வழியில்லாததால் சங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் என்ன சொல்வாரோ என தயங்க, தொழில் துறை அமைச்சருக்கு சில சமிங்ஞ்சைகள் கொடுக்க உடனடியாக 30 வது நாளில் அழைத்து பேச்சுவார்த்தை என பேசி சங்கம் உரிமை கொடுக்க முடியாது என போராட்டத்தை முடித்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினார். போராட்டத்தை நடத்துவது தோழமைக்கட்சி, எப்படிப்பட்ட தோழமை? என்ன தப்பு செய்தாலும் மூன்று ஆண்டாக முட்டுக்கொடுத்து அசிங்கப்பட்ட தோழமை, ஆனால் அவர்களைவிட சாம்சங் முதலாளி முக்கியத்துவம் வாய்ந்தவராக போய் விட்டார் இந்த இளைய அனுபவஸ்த்த தொழில் அமைச்சர். இதனால் வெகுண்டெழுந்த கூட்டணிக்கட்சிகள் மன்னிக்கவும் தோழமை கட்சிகள் ஓரணியில் திரள அப்போதும் கவலைப்படாமல் சாம்சங்க்கு பல்லக்கு தூக்கியதுமல்லாமல் தொழிலாளர் பக்கம் நின்ற தோழமை கட்சிகளை ஆதரவாளர் விங் ஆட்களை விட்டு கண்டபடி பேச வைத்து கூட்டணி முறிவுக்கு அச்சாரம் போடுகின்றனர். இதுகுறித்து எதுவும் அறியாமல் ஒரு முதல்வர் (கட்சித்தலைவரும் அவரே ) இருக்கிறார், அவருக்கு அதிகாரிகள் என்ன கொடுக்கிறார்களோ அதுதான் தெரியும். 2017 முதல் தன்னோடு உடனிருந்த தோழமைக்கட்சிகள் 2019, 2021 தேர்தல்களில் வெற்றிக்கு துணை நின்ற்வர்கள் அந்தக்கட்சிகள், அதன் தொண்டர்கள், அவர்களது வாக்குகள். அவர்களைப்பற்றி சிறு அக்கறைக்கூட இல்லாமல் சாம்சங் நலன் முக்கியம் என்று ஒரு தனி நிறுவனத்துக்கு துணை போனால் அதனால் நாளை ஆட்சிக்கே உலை வைக்கும் நிலை வரலாம் என்கிற குறைந்தப்பட்ச அறிவுக்கூட தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு இல்லை. ஆனால் முதல்வருக்கும், கட்சியில் உள்ள மூத்தோருக்கும் ஏன் இல்லை. நாளை சாம்சங் நிறுவனத்தால் அடைந்த லாபம் ஆட்சிக்கு வாக்குக்கு துணை வருமா? அல்லது தோழமைக்கட்சிகள் உதவி வாக்குக்கு துணை வருமா? இதுபற்றி அறியாதவர்கள் தன்னைச் சுற்றி ஒரு பெரும் கொத்தடிமை, ஆதரவு கூட்டத்தை கையில் வைத்துள்ளவர்களால் திமுக சூழப்பட்டுள்ளது. இந்த காக்கா கூட்டம் ஆட்சி மாறினால் எங்கு ஓடிப்போகும் என்பது தெரியாத அளவுக்கு காணாமல் போய்விடும். ஊடகங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுகவை ஆதரித்து அவ்வளவு துணை நின்றன. இன்று? மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்க் கின்றனர். காக்கா கூட்டத்தை நம்பி இளையோர் பெரும் கற்பனையில் ஆட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்கும் மன நிலையில் ஜன்னலை திறந்து எட்டிப்பார்த்து தெரிந்துக்கொள்ள இயலாமல், உளவுத்துறை தகவல், கட்சி அணியினர் தகவலைக்கூட பெற விரும்பாமல் ஒரு கட்சித்தலைவர், முதல்வராக வேறு இருக்கிறார். அவரது பிள்ளைக்கு லாலி பாடும் அதிகாரிகள் காவல் துறையினர் ஆட்சி மாறினால் வேறு இடத்துக்கு லாலி பாட ஓடி விடுவார்கள் என்பதுகூட தெரியவில்லை. முதியவர்கள், அனுபவம் மிக்கோர், மூத்தோர்கள் திமுக சோதனை காலத்தில் உழைத்தவர்களை ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு அனுபவம் இல்லா சின்னவர்கள் கையில் ஆட்சி, கூட்டணிகள் எந்நேரமும் கையை விட்டு போய்விடும் நிலை, போகட்டும் என்கிற ஆணவபோக்கு, சொல்வோர் பேச்சையும் கேட்காமல் ஒரு ஆட்சி, முடிவு என்னாகும் சொல்லி தெரிய வேண்டுமா? #திமுக #DMKFailsTN (இந்த படம் 1977 இல் எடுத்தது தலைவர் கலைஞர், அண்ணன் சி.மதுராந்தகம் ஆறுமுகம்) #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 13-10-2024.
Subscribe to:
Post Comments (Atom)
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment