#கோனார்நோட்ஸ்...#கோனார்தமிழ்உரை... நான் படிக்கும் காலத்தில் 1960 -1972 வரை பள்ளி, கல்லூரி காலங்களில் #கோனார் நோட்ஸ் ரொம்ப பிரபலம். தமிழ் புத்தகம் வாங்கும்போதே கோனார் நோட்சும் வாங்கிவிடுவோம்... அவ்வப்போது நண்பர்கள் வட்டத்தில் கேட்டுக் கொள்வோம் – யார்ரா இந்த கோனார், இப்படி நோட்ஸ் போட்டே பெரிய பணக்காரர் ஆயிருப்பார் போலிருக்கே என்று. பல வருஷக் கேள்விக்கு விடை... அறிந்து கொள்ளுங்கள்.... அவர் பேர் ஐயம் பெருமாள் கோனாராம். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவராம். எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் கோனார் நோட்ஸ் எண்பதுகளின் முற்பாதி வரைக்குமாவது பயன்படுத்தப்பட்டது என்று தெரியும். எழுத்தாளர் சுஜாதாவுக்கு இவர்தான் காலேஜில் தமிழ் ப்ரொஃபசர். தனக்கு தமிழார்வம் அதிகரிக்க #ஐயம்பெருமாள்கோனார் முக்கிய காரணம் என்று சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்....
Jul 20
No comments:
Post a Comment