Monday, July 28, 2025

*ஹரிஹர வீரமல்லு: அரசியல் பேசும் வரலாற்று நாயகனாக பவன் கல்யாண்*

 . *ஹரிஹர வீரமல்லு: அரசியல் பேசும் வரலாற்று நாயகனாக பவன் கல்யாண்*

Pawan Kalyan movie
பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பவன் ரசிகர்கள் மற்றும் ஜன சேனா கட்சித் தொண்டர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவேறியுள்ளது.
பல முறை தள்ளி வைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்று ஒருவழியாக திரைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கதை 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குழந்தை (சத்யராஜ்) கிடைக்கிறது. அந்தக் குழந்தை பலம் வாய்ந்த போர் வீரனாக வளர்கிறது.
ஒருபுறம் ஔரங்கசீப் மதமாற்றத்திற்கு மக்களைக் கட்டாயப்படுத்துகிறார். மதம் மாற மறுப்பவர்களைத் துன்புறுத்தி அவர்களுக்கு வரி விதிக்கிறார். மறுபுறம் பிரிட்டிஷார் மக்களிடம் கொள்ளயடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போதுதான் கதாநாயகன் அறிமுகம் ஆகிறார். மச்சிலிப்பட்டினத்தில் பிரிட்டிஷ் உயரதிகாரி ஒருவரிடம் இருந்து வைரத்தை திருடுவது போல அறிமுகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஜமீந்தார் ஒருவர், குதுப்ஷாஹியிடம் இருந்து வைரத்தை திருடி வருமாறு கதாநாயகன் வீரமல்லுவுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அவரது கட்டளையை நிறைவேற்றச் சென்ற இடத்தில் கதாநாயகி பஞ்சமி (நிதி அகர்வால்) மீது காதல் வயப்படுகிறார் வீரமல்லு.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்