1980களில் முதல் ஆதரித்து , பின்பு 1993 காலகட்டங்களில் வைகோவை திமுகவிலிருந்து தூக்கி எறிந்த போது ஜமுக்காளத்தை விரித்து அவரை பிடித்து பாதுகாத்த எங்கள் போன்ற முக்கியமான மூத்த தலைவர்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு தனக்கு தோனவர்களை 1998 பின கட்சிக்கு வந்தவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கட்சியையும் தனக்கெனத் தனிமைப்படுத்திக் கொண்டு அரசியல் செய்து வந்தவர் இன்று தன் தலையில் தானே மண்ணை வாரி அள்ளிப் போட்டுக் கொண்டார்.
இன்றைக்கு வைகோவுக்கு நடக்கின்ற வேதனையான சம்பவங்களுக்கு அவர்தான் காரணம். தனக்கு ஆதரவான ஆட்களைச் சேர்த்துக்கொண்டு இவர்தான் அவர்களுக்கு எல்லாம் வெளிச்சம் போட்டார். வாய்ப்புகளை அள்ளி வழங்கினார்.இன்றைக்கு அவர் ஆதாரித்த ஆட்களே அவரைக் கை விடுகிறார்கள். இந்த நிலை அவரே தேடிக்கொண்டது .இதுதான் ஊழ்வினை சிலப்பதிகாரத்தில் சொன்ன ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்.
No comments:
Post a Comment