Tuesday, August 5, 2025

1 august

 கொலைசெய்யப்பட்டு இறந்தவர்களின் துக்கவீட்டிற்குப்போய் விசாரித்து ஆறுதல் சொல்லப் போகிறவர்களாக தங்களைக்காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். காரை விட்டு இறங்குவதற்கு முன் ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு வருவார்கள். அப்படியே துக்க வீட்டுக்குள் நுழையும் போது அந்த ஆழ்ந்த சோகம் எங்கிருந்து வருமோ தெரியாது முகத்தை மாற்றி அவர்களின் கைகளைப் பிடித்து முகத்தை தொங்க வைத்துக்கொண்டும் காட்சியளிப்பார்கள். சிலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுவதைக்கூட என் அரசியல் வாழ்வில் பார்த்திருக்கிறேன். அடப்பாவிகளா என்று தோன்றும். எனக்கெல்லாம் துக்க வீட்டிற்குச் செல்லும் பொழுது என்ன நடந்தது எப்படி நடந்தது என்பதை அமைதியாக, இயல்பாக விசாரிப்பதுடன் அவர்கள் துக்கத்தில் மௌனமாகப்பங்கெடுத்துக் கொண்டு வருவது மட்டும்தான் நியாயமாகப்படும்.

ஆனால் அரசியல்வாதிகள் சிலர் உச்சத்துக்கே போய் துக்க வீட்டில் மிகையாக நடிப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. எல்லோரையும் நான் சொல்லவில்லை ஒரு சில ஆட்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்