#மதிமுகவில்1993இல்நடநத்துஎன்ன?
விருப்பம் போல சிலர் பேசுகின்றனர்
—————————————————————————
1)மதிமுக தோன்றிய போது அண்ணா அறிவாலய சொத்தை கையில் எடுப்போம் என்று ஒருபோதும் வைகோ சொல்லியதில்லை. திமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று மட்டும் தான் சொன்னார்.
2) இதுபோகக் கலைஞர் குடும்பத்தின் பெண்கள் அனைவரும் வெள்ளைச் சேலை கட்ட வேண்டிய நிலை ஙரும் என்று சொன்னவர் திருநெல்வேலி டி ஏ கே இலக்குமணன். அவர் காஞ்சிபுரம் , வேலூர் கூட்டங்களில் இப்படிப்பேசினார். வைகோ இப்படி பேச வில்லை. இப்படியான சம்பவங்கள் வரலாறு எதுவும் புரியாமல் 98 க்கு பிறகு வந்த மதிமுக பிரமுகர்கள் பலரும் தங்களை எல்லாம் தெரிந்த தலைவர்களாகக் காட்டிக் கொள்வது அவ்வளவு அழகல்ல. உண்மையைச் சொன்னால் நல்லது.எனக்கும் வைகோவிற்கும் எதிர்மறையான எண்ணங்கள் உண்டு. அதற்கான ரௌத்திரங்களும் எனக்கு உண்டு. என்னுடைய அறம் சார்ந்த அரசியல் பார்வைகள் பலதும் அவரால் அடிபட்டுப் போனதும் உண்டு.
எதுவானாலும் உள்ளதை உள்ளபடி பேச வேண்டும் என்பது என் பாணி. வைகோ திமுகவுடன் இருந்த போதும் பின் 1996, 98 வரை இப்போது இப்படி பேசுபவர்கள் யாரும் அவருடன் அன்று இல்லை.ஆனால் நான் 1998இல் என்னை வைகோ புறக்கனித்த் பின்பும் அவருடன் 2001 மார்ச் வரை பயணித்தேன். ஆனால் அதையெல்லாம் நன்றி மறந்தவராக இருந்த வைகோ 1998க்கு பிறகு மதிமுக விற்கு வந்தவர்களைப் பாராட்டினார் சீராட்டினார் காட்சிப்படுத்தினார் கௌரவப்படுத்தினார். வெளிச்சம் கொடுத்தார் மேலே தூக்கி வைத்தார். ஆனால் இப்போது அவர்களாலே வைகோ அவமதிப்பிற்கும் சீரழிவுக்கும் உள்ளாகிறார் இது அவராகத் தேடிக்கொண்டது. இதற்கு யார் என்ன செய்ய முடியும். இதற்காக இரக்கப்பட யார் இருக்கிறார்கள்.மதிமுகவை நிறுவியது நாங்கள் மட்டுமே. அதை உருவாக்கும் போது இருந்த நிலைகளை அறிந்தவர்களும் நாங்களே.இதை அறியாத பலரும் தங்கள் மனம் போன போக்கில் பேசுவது குறிப்பாக இன்றைய மதிமுகவைச் சேர்ந்தவர்கள் பேசுவது தவறானது. வரலாற்று அறிவு இல்லாதது. வைகோவை வீழ்த்தி சுயலாபம் பார்க்கும் நோக்கம் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
2001 மற்றும 2014 சட்டப்பேரவை தேர்தல்கள்
கட்டத்தில் கலைஞருக்கு பாலமாக இருந்தேன் . வைகோ கடைசியில் வெட்டி கொண்டு போனதால் எனக்கு ஏற்பட்ட சங்கடங்கள் அதிகம். இழப்புகள் அதிகம். மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி என்னை எல்லாம் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டுக் குறிப்பாகக் கலைஞர் என் மீது கோபம் கொள்ளும் வகையில் செய்துவிட்டு வெளியேறிப் போனார் வைகோ. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன் இந்த மதிமுகவிற்கு! இன்றைக்கு வந்தவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்?
வைகோவைப் பற்றி தாறுமாறான கதைகள் இன்று உலவுகின்றன. ஆனால் அவர் செய்த பாவம் எங்களைப் போன்றவர்களைப் புறம் தள்ளி வைத்துவிட்டு அவர் வளர்த்து விட்ட அரைகுறைகளில் வழியாகத்தான் இன்றைக்கு அவரது நிலைகள் பரிதாபகரமாகப் பரிசீலிக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment