Friday, August 8, 2025

4 august

 தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு இந்திய வெளி விவகாரத்துறையிடம் புகார் அளிக்காமல் நேரடியாகவே அந்த நாட்டு அதிபர் அனுராவிற்கு brother என கடிதம் எழுதிய அதி புத்திசாலிப் பெண்நாடாளுமன்ற உறுப்பினர் நமது தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது நாம் எல்லாம் அறிந்ததே. அவர் இப்போது புதிய பிரச்சினை ஒன்றைக் கிளப்பியுள்ளார். டெல்லியில் நடைபயிற்சி செய்யும் போது யாரோ அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பிடுங்கிச் சென்று விட்டதாக இந்திய உள் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் புகார் எழுப்புகிறார். உண்மையில் அவர் டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் சொல்வது தானே நியாயம். ஒரு எம்பி இடமே இது மாதிரி நடந்து இருப்பதற்காக டெல்லி போலீசார் விரைவு நடவடிக்கை மேற்கொள்ளச் செய்ய வேண்டியதை விட்டு விட்டு விளம்பரத்திற்காக ஏதோ செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய சொந்த விளம்பரத்திற்காக இலங்கை அனுராவுக்கு கடிதம் எழுதுவது நாடாளுமன்றத்தில் நகையை பிடிங்கிச் சென்று விட்டார்கள் என்று கூறுவதெல்லாம் முறைப்படி எங்கெங்கே என்ன விதமான புகார்களை அளிக்க வேண்டுமோ அப்படி அளித்துத் தான் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய தன் மனம் போன போக்கில் எதையாவது சொல்லி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது இவருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு பொது மனிதருக்கு நடப்பது மாதிரித் தான் இதை அணுக வேண்டும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு தனக்கான விளம்பரங்களையும் கவன ஈர்ப்புகளையும் தேடக்கூடாது.

அவர் தொகுதிப் பிரச்சனையை குறித்துப் பேச பாவம் அவருக்கு நேரம் இருக்கிறதோ என்னவோ.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்