வாக்குத் திருட்டு என்று எழுதிய தமிழ்ப் பதாகைகளை ஏந்திக் கொண்டு டெல்லியில் தமிழக எம்பிக்கள் கோஷம் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார்கள். இந்தியா முழுக்க மோடியை எதிர்க்கிறார்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அனைவரின் கையிலும் வாக்குத்திருட்டு என்கிற தமிழ் எழுத்தில் எழுதிய பதாகைகள் தான் இருக்கின்றன. கர்நாடக காங்கிரஸ்காரர்களுடைய கன்னட எழுத்துப் பதாகைகளோ தெலுங்குப் பதாகைகளோ இல்லை. கேரள கம்யூனிஸ்ட் சேட்டன்களின் மலையாள எழுத்துகள் இல்லை. சரத் பவாரின் மராட்டிய மொழியிலும் இல்லை. ஜம்மு காஷ்மீர் எழுத்துகளோ உத்தர பிரதேசத்தை சேர்ந்த இந்துக்காரர்கள் அதாவது அகிலேஷ் யாதவின் இந்தியையும் பதாகைகளில் காண முடியவில்லை.. எதோ 40 எம்பிக்கள் ஜெயித்துவிட்டார்கள் என்கிற முறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்கள்தான் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால்தான் உலகமே நடப்பது மாதிரி ராகுல் காந்தியையும் அவரது சகோதரி பிரியங்காவையும் வைத்துப் பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த எம்பிக்கள் எல்லாம் பிரைம் மினிஸ்டரிடம் நேரில் செல்லும்போது பம்முகிறார்கள்.அமித்ஷாவைப் பார்க்கிற போது அதைவிடப் பம்முகிறார்கள். உலக மகா நடிப்புடா சாமி! தேர்தல் கமிஷனின் குளறுபடிகள் புதிய விஷயமல்ல. ஆண்டாண்டு காலமாக இருப்பதுதான்.
உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கப்படுவதும், இறந்தவர் பெயர் இடம் பெறுவதும் வழக்கமான ஒன்று.
ஆண் வாக்காளர் பெண் வாக்காளராகவும், பெண், ஆண்கள் பட்டியலில் இடம் பெறுவதும், பெயர், வயது தவறாக இருப்பதும், முகவரி மாறியிருப்பதும், தந்தை பெயர் வேறாக இருப்பதும் எல்லா தேர்தல்களிலும் நடப்பவைதான். இதனால், வாக்களிக்கச் சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பியவர்கள் கடந்த காலங்களில் ஏராளம்.
இதற்கு தேர்தல் கமிஷனில் பணி புரிபவர்களின் திறமைக்குறைவுதான் காரணமே தவிர, தேர்தல் கமிஷனே திட்டமிட்டு செய்கிற முறைகேடுகள் அல்ல இவை. இக்குளறுபடிகள் தேர்தல் முடிவை மாற்றி விடும் சாத்தியம் மிக மிகக் குறைவு.
அரசியல் கட்சிகள் செய்யும் தில்லுமுல்லுகள், தேர்தல் கமிஷனின் குளறுபடிகளை விட பல மடங்கு அதிகம். தேர்தல் முடிவு அரசியல் கட்சிகளின் தில்லு முல்லுகளால் மட்டுமே மாறும் அபாயம் உண்டு.
மாநகராட்சித் தேர்தல்களில், திமுக அதிமுக ஆட்சிக் காலங்களின்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆளும் கட்சி முறைகேடுகள் நடந்துள்ளன. அப்போது எதிர்க்கட்சியாக திமுக இருந்தாலும் அதிமுக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது. ஆளும் கட்சியின் கையே ஓங்கியிருக்கும்.
ஆனால், ராகுல், தனக்கு கிடைத்த தேர்தல் கமிஷன் குளறுபடிகளை லட்சக்கணக்கில் மிகைப்படுத்தி, குற்றம் சாட்டுகிறார். மோடி மீதான வெறுப்பில், மற்ற எதிர்க்கட்சித்தலைவர்களும் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்கின்றனர்.
ராகுல் குற்றம் சாட்டியபடி நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான், குற்றச்சாட்டை நிரூபிக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்கிறது. ஆனால், ராகுலால் நிரூபிக்க முடியவில்லை.
' குற்றம் சாட்டுவது எதிர்க்கட்சியின் வேலை. நான் சொல்லி விட்டேன். நீங்கள் நிரூபியுங்கள். அது என் பொறுப்பல்ல' என்ற வகையில் வாதம் செய்கிறார்.
பொறுப்பான எந்த அரசியல் தலைவரும் இப்படி ஏனோதானோ என்று குற்றம் சாட்ட மாட்டார். ஆனால் ராகுல் விதி விலக்கு.
அவர் எப்படி வேண்டுமானாலும் குற்றம் சாட்டுவார்.

.jpg)



No comments:
Post a Comment