Saturday, September 12, 2015

புத்தகக் கண்காட்சி



மதுரைக்குச் சென்றபோது, ஒரு நண்பர் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்திருந்தார். நீங்கள் சென்றுவாருங்கள் நான் போவதில்லை என்றேன். ஏன் என்று பதிலுக்குக் கேள்விகேட்டார்.

நான் சொன்னேன், “ சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடக்கும்போது, அமைதியாக, பொறுமையாக, புத்தகங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டே செல்லலாம். இப்போது புத்தகக் கண்காட்சியில் என்ன நடக்கிறது?

தின்பண்டங்கள் உண்டுவிட்டு, வேறு பொழுது போக்குகின்ற அம்சங்களைப் பார்த்துவிட்டுச் செல்கின்ற கேளிக்கையாக மாறிவிட்டது. புத்தகங்களை வாங்குபவர்களும், படிப்பவர்களும் இந்த அமைதி அற்ற நிலையைப் பார்த்து அங்கே செல்வதை நிறுத்திவிட்டார்கள். புதிய நூல்களையும் அரிய புத்தகங்களையும் அமைதியாகப் பார்த்து கவனித்து வாங்கிச் செல்லும் நோக்கம் கடந்த பத்தாண்டுகளாக இல்லாமல் போய்விட்டது” என்றேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-09-2015.

#KsRadhakrishnan
#KSR_Posts
#BookFair

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்