Sunday, September 13, 2015

ஐ.நா.அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைப்பு. - Sri Lanka gets UN Report.



ஐ.நா.அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைப்பு. - Sri Lanka gets UN Report. _________________________________________ இலங்கையில் 2001லிருந்து 2009வரை நடந்த போர்குற்றங்கள் குறித்தான அறிக்கை கடந்த 11-09-2015 அன்று இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான விவாதம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்திலும் நடக்க இருக்கின்றது. அமெரிக்காவும் இலங்கையும் இதுகுறித்தான விவாதங்களை நடத்தி உள்ளகப் பொறிமுறையை கையாளுவதற்கான சூழல் நிலவுகின்றது. ஐ.நா. அறிக்கையின் முத்திரையிட்ட இரண்டு பிரதிகள் இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையத்தில் முன்வைக்கப்படும் வரை இந்த அறிக்கைரகசியமாக வைக்கப்படும். போர்குற்றங்கள் குறித்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தரப்பில் செய்திகள் வந்துள்ளது. ஆனாலும் போருக்கு காரணமான ராஜபக்‌ஷேவோ, அவர் சகாக்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ போர்க்குற்றவாளிகள் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த சுமார் 3.50லட்சம் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மகிந்த ராஜபக்‌ஷே மறுத்தது உட்பட சில குற்றசாட்டுகள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்‌ஷேவின் குற்றங்களை மூடிமைறைக்கின்ற விதமாகத்தான் இந்த அறிக்கை அமைந்துள்ளதாகத் தெரிகிறது. திரும்பவும் ஈழத்தமிழன் ஏமாற்றப்பட்டான். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 13-09-2015. #KsRadhakrishnan #KSR_Posts #SrilankaTamilsIssue #UNreport

No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...