Saturday, September 19, 2015

ஈழப்பிரச்சனையில் ஐ.நா.அறிக்கை - UN Report on Srilanka Tamils issue.



இந்தவார (செப்-19-22) நக்கீரன் இதழில் ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக என்னுடைய கருத்து வெளிவந்துள்ளது.

“ ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டபடி கலப்பின விசாரணையினால் எந்த முடிவும், தீர்வும் ஏற்படாது. திட்டமிட்டவாறு சர்வதேச நமபகமான சுதந்திரமான விசாரணைதான் உண்மையை வெளிப்படுத்தும். உண்மையான குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள்.

ஈழத்தில் தமிழ இனத்திற்காகப் போராடிய போராளிகளையும் குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டும் என்று சொல்கின்ற இந்த ஐ.நா அறிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். வழ வழ கொழகொழ என்று உப்புச்சப்பில்லாமல் பிரச்சனைகளை நீர்த்துப் போக வைப்பதுதான் இந்த ஐ.நா அறிக்கை.

நக்கீரனில் நான் பதிவு செய்த என்னுடைய கருத்து..

“ சர்வதேச நீதிமன்ற விசாரணையே வேண்டும். போர்க்குற்றங்களை நிரூபிப்பதற்கு முதல்வழி புலனாய்வு விசாரணை. புலனாய்வு செய்யாமல் சர்வதேச நீதிமன்றத்தை கோரமுடியாது. அந்தவகையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருப்பது புலனாய்வுக்குழுவின் அறிக்கை. அதில் அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் அமைக்கப் பரிந்துரைப்பது பொருத்தமாக இல்லை.

இந்த கலப்பு நீதிமன்றத்தை இலங்கையை தவிர்த்து வேறுநாடுகள் ஒன்றில் நடத்த பரிந்துரைக்கவேண்டும். மனித உரிமை மீறல் குறித்து பேசும் இந்த அறிக்கை வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை அழித்தொழித்த போர்க்குற்றத்தை சுட்டிக்காட்ட மறுக்கின்றது.

இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் பின்னால் நின்று யுத்தத்தை நடத்தின. அவைகளைப்பர்றி அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. அதேபோல குற்றவாளிகளையும் அடையாளப்படுத்தவில்லை.

ஐ.நா.அறிக்கையில் குற்றவாளிகள் முதலில் அடையாளப் படுத்தப்பட்டதாகவும், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அழுத்தம் காரணமாக அவை கடைசி நேரத்தில் நீக்கப்பட்டன என்றும் எனக்கு தகவல்கள் கிடைத்தன.

இலங்கை அரசின் போர்க்குற்றத்துடன் புலிகளையும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுவது தவறானது. உரிமைக்காகப் போராடும் இயக்கத்தின் நடவடிக்கைகள் போர்க்குற்றமாகக் கருதப்படக்கூடாது. அதேபோல, கலப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை”

-கே.எஸ்இராதாகிருஷ்ணன்.
19-09-2015.

#UNReport #Srilanka #TamilsIssue. #KsRadhakrishnan #KSR_Posts

1 comment:

  1. எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ... அமெரிக்க விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இறுதி கட்ட போர் க்கு பின்னர் ஒரு தமிழ் நெஞ்சம் கூட தனி ஈழம் பற்றி யோசிகவீல்லையா? ஐயா பாலசிங்கம் அவர்களும் மற்றும் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களும் விட்டு சென்ற அரசியல் ரீதியான அழுத்தத்தை கொடுக்க யாரும் முன்வரைள்ளய்யே. என் ஐ.நா அறிக்கை, ஐ.நா விசாரணை பற்றி கவலை பட்டு கொண்டு நேரத்தை வீணடிக்கிறோம்? நாம் நமது குரிகொலேளிருந்து விட்டு விலகி செல்ல காரணம் என்ன? ஒரு தமிழனுக்கும் துணிவில்லையா என்ன? இதற்கு முதற்படியாக நாம் எல்லோரும் சேர்ந்து இன்று முதல் 30 ஆம் திகதி வரை ஈழம் நேரம் இறவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒபாமா அவர்கள் மைத்திரிபால சிரிசேன விடம் தனி ஈழம் கொடுப்பதை பற்றீ வலிவுருத்த வேண்டும் என்று கூட்டூ தவம் மற்றும் கூட்டூ பிரார்த்தனை (எந்த கடவுள் ஆனாலும் சரி) செய்வோம். தவம் தெரியாதவர்கள் மற்றும்பிரர்தனைஇல் நம்பிக்கை இல்லாதவர்களும் மனதில் ஆலமாகா யோசித்தால் போதும். வேலை பளு அதிகம் உள்ளவர்கள், அவர்கள் வசதி கேற்ப தவம் மற்றும் பிரார்த்தனை யில் ஈடுபடலாம். இது துவக்கம் மட்டுமே.... இன்னும் ஒரு பாலசிங்கம், ஒரு தமிழ்ச்செல்வன் உருவாக வேண்டும் உருவாக வேண்டும், நமக்கு தனி ஈழம் பெற்று தர வேண்டும்..
    நம்பிக்கையோடு
    ஆர் கே

    ReplyDelete

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...