Tuesday, April 4, 2017

போராட்டங்கள்

போராட்டங்கள்:
----------------

புதுடெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில்  தொடர்ந்து 21வது நாளாக விவசாயிகள் போராட்டம். 

ஒரு போராட்டம் என்றால் அதனை மாவட்ட தலைநகரங்களிலோ அல்லது மாநில தலைநகரிலோ செய்வது வழக்கம். அப்போது தான் அந்த போராட்டம் சம்மந்தப்பட்ட  நிர்வாகத்தை எளிதில் சென்றடையும். இவ்வாறாக விவசாயிகள் மாவட்டம், மாநிலம் என தலைநகர்களில் போராடி வந்தனர். தற்கொலையால் தலைகள் சாய்ந்தனவே அன்றி தறுதலைகள் காதில் மட்டும் விழவே இல்லை. இந்த நிலையில் தான் இந்திய தலைநகரம் டெல்லியில் தங்களது போராட்டத்தை விவசாயிகள் அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் தொடங்கினார்கள். 

நாட்டில் தலைநகரில் தொடங்கிய போரட்டாம் ,  அண்டை நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும், பிறநாட்டவர்களையும் சென்றடைந்து அந்நாடுகளில் பத்திரிக்கை செய்தியாக பிரசுரிக்கப்படுகின்றன. 

ஆனால், மக்கள் மீது அக்கறையற்ற இந்த அரசுகளின் செவிகளை மட்டும் சென்றடையவில்லை. செவிகளுக்குள் செல்லாத #போராட்டம் எப்படி வெல்லும்? 

சுதந்திர இந்தியாவில் நடந்த போராட்டங்களான இந்தி திணிப்பு  எதிர்ப்பு போராட்டம், இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெய்ப்ரகாஷ் நாராயணன் அறிவித்த அறப்போராட்டம் , அசாம் மாணவர்கள் போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள் வெகுண்டெழுந்து நடத்தித அமைதிப் போராட்டங்கள் மத்தியில் ஆளும் அரசை அச்ச படுத்த வைத்தது.

இறுதியாக நடைபெற்ற ஆந்திராவௌ பிரித்து தனித் தெலுங்கான மாநிலம் கோரி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அதுவும் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு சுயலாபம் கருதி  ஒத்துழைத்த காரணத்தால் வெற்றி அடைந்தது. 

தமிழகத்தில், விவசாயிகள் போராட்டம் நாராயானசாமி நாயுடு அவர்கள் தலைமையில் நடத்திய போது மத்திய, மாநில அரசுகளிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் முழு அளவில் வெற்றி பெறுவதற்கு முன்னதாக நாராயணசாமி நாயுடு மறைந்து விட்டார்.  அதன் பின்  தமிழகத்தில் நடந்த காவிரி நதிநீர் பங்கீடு போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், பாலாறு போராட்டம், கூடங்குளம் போராட்டம், மீத்தேன் போராட்டம் இன்று நடந்துக் கொண்டிருக்கும் நெடுவாசல் போராட்டமாகட்டும் என பல போராட்டங்கள் எத்தனையோ அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், தியாகத்துடன் போராடினாலும்  சென்றடைய வேண்டிய செவிகளுக்குள் செல்லவில்லை.  அரசுகள் எருமை மாட்டின் மீது மழை பெய்த என்று கூறுவார்களே அதைப்போல அசைவின்றி கிடக்கின்றன அரசுகள்.   போராட்ட களத்தின் யுக்தியை மாற்ற வேண்டுமா என்ற சிந்தனை இங்கு தான் துளிர்க்கின்றது. 

அன்று பசு நீதிக்கேட்டு மணி அடிக்க, மனுநீதிச்சோழன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதிவழங்கினான். இன்று மக்கள் உரிமைக் கேட்டு  மணி அடிக்கின்றார்கள். அரசுகள் மாடுகளைப் போல் அசைவின்றி கிடக்கின்றன

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...