இந்திய
தேசிய காங்கிரஸ் 1885ல் துவங்குவதற்கு அடிப்படையான பணிகளை ஆற்றியவர். அதன் தலைவராக
1886ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 1906 வரை அப்பதவியில் நீடித்தார்.
மதம், இனம் என்ற பேதமற்ற சமுதாயம் அமைந்து, வறுமையற்ற பொருளாதாரம் நாட்டுக்கு அவசியம் என்று முதன்முதலாக நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர். நவீன புதிய யுகத்தினை இந்தியா அடைய வேண்டுமென்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குரல் கொடுத்தவர். இவரை இந்தியாவின் முதுபெரும் கிழவர் என்று அழைப்பதுண்டு.
மதம், இனம் என்ற பேதமற்ற சமுதாயம் அமைந்து, வறுமையற்ற பொருளாதாரம் நாட்டுக்கு அவசியம் என்று முதன்முதலாக நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர். நவீன புதிய யுகத்தினை இந்தியா அடைய வேண்டுமென்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குரல் கொடுத்தவர். இவரை இந்தியாவின் முதுபெரும் கிழவர் என்று அழைப்பதுண்டு.
கோபாலகிருஷ்ண
கோகலே, திலகர், அன்னி பெசன்ட், காந்தி, ஜின்னா போன்ற பலரும் நேசித்த
தலைவர் தான் இந்த நௌரோஜி. பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம், பட்டினிச் சாவுகள் இவரை வேதனைப்படுத்தியது. இதற்கெல்லாம்
ஆங்கில அரசு தான் என்றும்,
நம்முடைய
வளங்களை சுரண்டி, ரத்ததை உறிந்து டிரெயின்
தியரி என்று பிரிட்டிஷ் தன்னை வளர்த்துக் கொள்கிறது என்று கடுமையாக சாடினார். இதை
குறித்து 1867ல் 'பிரிட்டிஷ் ஆட்சியில்
இந்தியாவில் வறுமை' என்ற நூலை வெளியிட்டது
பெரும் அதிர்வையும் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது அச்சங்கள் கூடிய சந்தேகங்களை
உருவாக்கின. வெளிப்படையாக 1857ல் இருந்து சுமார் 30 கோடி பிரிட்டிஷ் பவுண்ட்கள்
இங்கிலாந்து கொள்ளையடித்துவிட்டது என்று குற்றஞ்சாட்டினார். இதை திருடப்பட்ட
செல்வம் என்றும் குறிப்பிட்டார். இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை சுதேசிமயமாக இருக்கவேண்டுமென்று
வலியுறுத்தினார்.
‘வங்கப் பிரிவினை’ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக
1906ல் நடைபெற்ற போது இவரது பங்களிப்பு அதிகம். கல்கத்தாவில் நடந்த மாநாட்டில்
இந்த நிலையை சரிசெய்ய பொறுத்தமானவர் என்று அனைவராலும் தலைமைப் பதவிக்கு
திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் தான் ‘சுயராஜ்யம்’ அடிப்படை லட்சியம் என்று தெளிவுப்படுத்தினார். அன்னியப்
பொருள்களை விலக்கி சுதேசி பொருள்களை வாங்கி பொருளாதார தேசியம் என்ற புதுக்
கொள்கையை வடிவமைத்தார்.
கோகலே, திலகர்,
காந்தி
போன்றோர் அவரிடம் ஆலோசனைகளை பெற்றனர். மகாத்மா காந்தி இவரை இந்திய தேசியத்தின்
பிதாமகர் என்றும், தேசத்தின் தந்தை என்றும், விடுதலை இயக்கத்திற்கு வித்திட்டவர் என்றும் பெருமையோடு
விளித்தது உண்டு. தேசத்தந்தை உத்தமர் காந்திக்கே தந்தையாக விளங்கிய நௌரோஜி
இந்தியாவின் தந்தையின் தந்தை என்று அழைக்கப்பட வேண்டும். இவர் 1917 ஜூன் 30
காலமாகி நூறாண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆகவே பாரதியும் இவரைப் பற்றி எழுதியது
உண்டு.
ரஷ்யாவில்
இவர் இருக்கும் பொழுதே ரஷ்ய புரட்சிக்கான விதைகள் தூவப்பட்டன.
#தாதாபாய்_நௌரோஜி
#விடுதலைப்_போராட்டம்
#தேசத்தந்தை
#Freedom_Struggle
#dadabhai_naoroji
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
02-07-2017
No comments:
Post a Comment