கதிராமங்கலம்......
மண்ணைத் துளைக்காத,
மக்களை எரிக்காதே..
-தம்பி மு.ரா விவேக் வரிகள்
சீர்காழி லேர்ந்து
வைத்தீஸ்வரன்கோவில்
மாயவரம்
குத்தாலம்
குடவாசல்
ஆடுதுறை
கும்பகோணம்
அப்படியே அந்த பக்கம்
மாயவரத்துலேந்து
திருவாரூர்
நன்நிலம்
கொல்லுமாங்குடி
மன்னார்குடி
ரைட் ல போனா....
சேத்தூர்
கடலங்குடி
மணல்மேடு
புத்தாகரம் ...அப்படியே போய் கும்பகோணோம் சேரும்
எவளோ சின்ன சின்ன சின்ன கிராமங்கள்.....
இந்த பகுதிக்கெல்லாம் தை மாதங்களில் அதிகாலை பொழுதுகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது .....
நெற்கதிர் சாய்ந்து அந்த பாலின் வாசமும்-நெற்கதிரின் வாசமும் -ரோடு ஓரத்தில் புல்லில் இரவு பெய்த பனியின் வாசமும் .....கலந்து இனம்புரியாத உலகத்துக்கு செல்வோம்.......
இப்ப பச்சை புல்லும்-செடியும் தீ புடிச்சு எரியுது......
பதற்றம் , மரண பீதி , மயான அமைதி , காவல்துறை அராஜகம் , கழுத்தறுப்புவேலைகள் ,ஆள்காட்டி வேலைகள் , அடாவடி , அடிதடி , அடக்குமுறை - இப்படி பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதத்தை ஒட்டு மொத்தமாய் அரங்கேற்றி அதை பரிசோதனை செய்து வெற்றிகண்டிருக்கிறது பாசிச மத்திய மாநில அரசுகள்
#கதிராமங்கலம்
#cauverydelta
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-07-2017
No comments:
Post a Comment