Wednesday, September 20, 2017

தமிழகத்தின் எம்பி /எம்எல்ஏக்களை அழைத்து தமிழக பிரச்சனைகள் குறித்து வினாக்களை எழுப்பினால் ........


-------------------------------------

தமிழகத்தின் எம்பி /எம்எல்ஏக்களை ஒரு அரங்கத்தில் கூட்டி சில மெத்த அறிந்தவர்கள் தமிழகத்தின் கீழ்காணும் பிரச்சனையை பற்றி பேசச் சொன்னால் எப்படி இருக்கும். தமிழக மக்கள் இப்படிப்பட்டவர்களை நமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிந்து கொள்ளட்டும்.

காலச்சக்கரங்கள் மாறி எதுவும் வெளிப்படைத் தன்மைகள் இருக்க வேண்டுமென்ற காலகட்டத்தில் இதுவும் அவசியமே.  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் இந்த பொறுப்புகளில் முன்னால் அங்கம் வகித்தவர்களையும் அழைத்து தமிழக பிரச்சனைகள் குறித்து வினாக்களை எழுப்பினால் நம்முடைய அரசியலும் முடிவுகளும் நேர்திசையில் செல்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இம்மாதிரியான நிகழ்வை ,தமிழகத்தின் மக்கள் நலனில் அக்கறை கொண்ட யாராவது சிலர் அரங்கத்தை அமைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழையுங்கள். அவர்கள் ஒருபுறமும்,  வாக்களித்த மக்கள் , அரசியல் விமர்சகர்கள் ஒருபுறமும் அமர்ந்து விவாதிப்போம்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு, அடவிநயனாறு, செண்பகவள்ளி, அழகர் அணை, உள்ளாறு, மஞ்சளாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி, பொன்னியாறு, ஒகேனக்கல், நதி நீர் இணைப்புகள் போன்ற பல நீர் ஆதாரப் பிரச்சினைகள், 

நீட் தேர்வு, நவோதயா பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகச்சத்தீவு பிரச்சனை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பிரச்சனை, சேலம் இரும்பாலை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு, ஊட்டி பிலிம் தொழிற்சாலை  ஊழியர்கள் பிரச்சனை.
ஈழப்போராட்டம்...

கிடப்பில் போடப்பட்டுள்ள அகல ரயில்பாதை திட்டங்கள், கடலூர், நாகை, குளச்சல் துறைமுகம் திட்டங்கள், முட்டம் , மூக்கையூர் சிறு மீன்பிடி துறைமுக அமைக்கும் திட்டம். இதுபோன்ற கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள். 

இந்துமகா சமுத்திரம் தமிழக பாதுகாப்பு குறித்தோ, டீகோகார்சியா தீவு அச்சுறுத்தல்  இப்படியான நூற்றுக்கணக்கான பிரச்சனைகள் தமிழக நலனுக்கு தடையாகவும், சமூகநீதி, உரிமைகள்  மறுக்கப்பட்டும் உள்ளன. 

மேலே உள்ள எதுவும் கூட வேண்டாம்.   ஓமந்தூரார், தந்தை பெரியார், காமராசர் அறிஞர் அண்ணா ஆகியோர் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். 

அப்படி அவர்கள் சரியான முறையில் பதில் தந்தால்  தமிழகம் பொருத்தமானவர்களை தேர்ந்து
எடுத்துயுள்ளது என உறுதியாக 
நினைக்கலாம் 

தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட  பிரச்சனைகளை அடையாளம் கண்டு , அவைகளுக்கான  தீர்வுகளை அடைய  முன்னெடுப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்று இன்னும் இரண்டு மாதங்களில் வெளியிட இருக்கின்றேன். இந்த நிகழ்ச்சியில்  பங்குபெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த புத்தகம் நிச்சயம் பயனளிக்கும்..

#அரசியல்மேடை
#தமிழகத்தின்தலையாயபிரச்சனைகள். 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-09-2017

No comments:

Post a Comment

Nungambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Nungambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...