Friday, September 29, 2017

நல்லக்கண்ணுவுடனான சந்திப்பின் போது மணிப்பூரின் இரும்பு பெண்மணியை சந்தித்தேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுடன் நதிநீர் இணைப்பு மற்றும் மணல்குவாரி விதிமீறல்கள் குறித்து கலந்து பேச வேண்டி இருந்தது. அதனால் அவரை சந்திக்க அவரது இல்லம் சென்றேன். என்னுடன் முன்னாள் அமைச்சர் தங்கவேலு பெரியநாயக்கன் பாளையம் கழக ஒன்றிய செயலாளர் பத்மாலாயா சீனுவாசன் உடன் வந்திருந்தனர்.

எங்கள் சந்திப்புக்களுக்கிடையே மணிப்பூரின் இரும்பு பெண்மணி, தனது உடலை, உயிரை ஆயுதமாக கொண்டு 16 ஆண்டுகாலம் உண்ணாவிரத போராட்டம் செய்து தேர்தல் அரசியலில் தகுதியே தடை என வெறும் 16 வாக்குகளை பெற்று தோல்வியடைந்த சகோதரி ஐரோம் சர்மிளா அவர்கள் தன் கணவர் உடன் அங்கு வந்திருந்தார். அவரை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்த போது சந்திக்க முயன்று இருக்கின்றேன் ஆனால் முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று அவரை சந்திக்க நேர்ந்தது. அவரது வீரத்தையும் மனவலிமையையும் பாராட்டி மகிழ்ந்தோம்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும், நான் வழக்கமாக சொல்வது போல் தகுதியே தடை என்ற கோட்பாட்டின் படி மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மனவலிமையுடன் காணப்படுகின்றார். அவருடைய கணவர் கோவாவை சேர்ந்தவர்,அவரும்ஒருபோராளி.
அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் கொள்கை போராட்டத்தில் வெற்றி அடையவும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்தோம். பொதுநலத்தில் மனம் இரனமானதே அதிகம். இந்த சந்திப்பால் இன்றைய நாள் திருப்தியான, மிக மகிழ்ச்சியான நாட்களின் பட்டியலில் ஒன்றானது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-09-2017

No comments:

Post a Comment

#*திருநெல்வேலி* #*திருப்புடைமருதூர்* #*நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியன்*

#*திருநெல்வேலி*  #*திருப்புடைமருதூர்* #*நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியன்* ———————————— திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநா...