Monday, September 18, 2017

தமிழக அரசியல்...

தமிழக அரசியல்

இன்றைய தமிழக அரசியல் நிலையை செய்தியாக கேட்க வெட்க கேடாக இருக்கின்றது. இவ்வளவு கேலிக் கூத்துகள் நடத்த முடியுமோ அத்தனை கேளிக்கூத்துகளையும் நடத்தி விட்டனர். தமிழக அரசியல்வாதி என பிறமாநிலத்தை சேர்ந்த நண்பர்களிடம் சொல்லிக் கொள்ள அருவருப்பாக இருக்கின்றது.  இன்றைய நிலைபற்றி நியாயமான கருத்துக்களை சொல்லித் தொலைக்கலாம் என்றாலும் நிறைய பேர்களின் கோபத்துக்கும், வருத்தத்திற்கும்  ஆளாக இருக்க வேண்டி வரும் என அமைதியாக இருக்கின்றேன். இந்த அரசியல் களத்திலா 45 ஆண்டுகளை வீணாக்கினேன்? இதற்காக வெட்கப்ப்டுகின்றேன். தகுதி இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் இந்த நிலையிலும்  மக்கள் வெட்கப்படப் போவதில்லை. 

#அரசியல் 
#KSradhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
18-09-2017

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...