Thursday, June 7, 2018

வட்டாரவழக்கு

ஏங்க ஞாயித்து கெழமை திர்நேலியில கல்யாணம் சீல்த்தூர்ல இருந்து மாமா கார்ல நானு மாமா எங்கண்ணாச்சி ரெண்டு பேர் கூட நாலு பேர் திர்நேலி போனோம்.

கல்யாண மண்டபம் பாளையங்கோட்டைல கல்யாணம் முடிஞ்சி பொண்ணு மாப்ளய
வர்சைல நின்னு பார்த்துட்டு அந்தாள கவரக் கொடுத்தோம்.

அந்தாள அங்கன சாப்புட்டு காலாகாலத்துல 
ஊருக்கு போவோம்னா கேக்காகலா இந்த சென்டு மாமாவும், பொன்ராஜ் அண்ணாச்சியும். ஏலே போவெய்ல சங்கரன்கோயில்ல சுல்தான் ஓட்டல்
பிரியாணிய சாப்புட்டு போவலாம்
என்னா.

செரின்னு அடிச்சி புடிச்சி சங்கரன்கோயில்க்கு போனா ரெண்டு மணிக்கெல்லாம் போயாச்சி.அங்கன
பாருங்க சுல்தான் ஹோட்டல் மூடிக்கெடக்கு.வாசல்ல ஒருத்தம்
நிக்குதாம்.

ஏண்டா ஞாயீத்துக் கெழமை கடையடைப்பானு பார்த்தா அங்கன உள்ள பாத்தா பட்டியில ஆட்டை அடைச்ச
கெணக்கா நூறு தலை தெர்யுது உள்ள.

வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாள் கிட்ட
கேட்டம் பார்த்தியா. ஓ..ய் என்னவே
பிரியாணி முடிஞ்சிட்டா.

ஆமம் உள்ளே இருக்காளுக்கு தாம்
முடிஞ்சிட்டு அவ்ளோதாம்.

செரின்னு பக்கத்துல ஒரு ஆட்டோக்காரன்கிட்ட வெசாரிச்சோம் எலேய் இந்தூர்ல வேற எங்கன பிரியாணி நல்லாருக்கும் சொல்லு.

அவம் சொன்னாம் திர்நேலி ரோட்டுல
பொன்னி ஓட்டலு தெர்யுமா அங்கன
போய்க்கிடுங்க.அங்கன நல்லாருக்கும்.

செரின்னு பொன்னி ஓட்டலுக்கு வண்டிய
விட்டோம்.அங்கனயும் கூட்டம் உள்ளொ
நொழைஞ்சி ஒரு வழியா சீட்டை 
பிடிச்சி ஒக்கார்ந்து மட்டன் பிரியாணிய
சாப்புட்டோம்.

ஏங் கேக்கீக இம்புட்டு பிரியாணிக்கு இந்தப் பாடா.இதுவும் நல்லா தான் இருந்துச்சி பொன்னி ஓட்டல் பிரியாணி சுல்தான் ஓட்டலு பிரியாணிய தூக்கி சாப்புட்ருச்சில்ல.

அதுக்கப்புறம் எங்களுக்கு பின்னால வந்தவனுகளுக்கு கையை ஆட்டிட்டாம்ல ஓட்டல்க்காரன்.

சங்கரன்கோயில் பிரியாணி நல்லாதாம்யா இருக்கி.

அந்த ஏரியா பேச்சு வழக்கு இப்படி 
தான் இருக்கு.

#வட்டாரவழக்கு


No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...