Friday, June 15, 2018

#ராஜுவ் படு கொலை #rajivcaseconvicts

ராஜுவ் படு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட. ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஓர் மனதாக நிறைவேற்றிய தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய தமிழக அரசின் வேண்டுகோளை உள்துறை அமைச்சர் ஏற்க மறுத்து அனுப்பிய பரிந்துரையை குடியரசு தலைவர் அவர்கள் ஏற்றுக் கொண்டு ஏழு பேரையும் விடுதலை செய்ய மறுத்துள்ள செய்தி தமிழகத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது ஜனநாயக நெறி முறைகளுக்கு எதிரானதாகும். 

மதுரை மத்திய சிறையுள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய புத்தகத்தில் “சதி அரசியல் குறித்து’ துணிச்சலுடன் விவரிக்கும் உண்மைகள்தான் நினைவுக்கு வருகிறது.

இவர்கள் குற்றவாளிகள் என்பதை விசாரணையில் எங்கேயும் நிருபிக்கப்படவில்லை. தடாவில் பெறப்பட்ட வாக்குமூலங்களை வைத்தே அவர்களுக்கு கொடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அதுவும் ரத்துசெய்யப்பட்டு விட்டது.27 வருட தண்டனை காலம் என்பது கொடுமை...


அடுத்து,இதை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
ஏழு பேருக்கும் இடைக்காலத்தில் பரோல் தமிழக அரசு அளிக்க வேண்டும். அல்லது மாநில அரசு தன் அதிகாரத்தை பிரிவு 161யை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்வதுதான் ஓரே வழி......

http://www.thehindu.com/news/national/president-rejects-tamil-nadus-plea-to-release-rajiv-case-convicts/article24167363.ece?homepage=true


#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-06-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...