Saturday, November 23, 2019

தென்காசி_மாவட்டமாக_உதயமானது :

#தென்காசி_மாவட்டமாக_உதயமானது :
-------------------------------------
நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி.

(வரைபடம்-திருநெல்வேலி மாவட்டம் 1940களில் .Then Tirunelveli district-1940s.)

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 33வது புதிய  மாவட்டமாக அமைகிறது தென்காசி.

புதிய மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கோட்டங்கள் மற்றும் 8 தாலுகாக்களை உள்ளடக்கியது.

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

தூத்துக்குடி,தென்காசி,நெல்லை என்று மாவட்டங்கள் பிரிந்தாலும் எல்லாமே நெல்லை சீமைதான்!

என் தகப்பா..... 
நெல்லையப்பா....நானுனக்கு



பிள்ளையப்பா....

சரிக்குச்சரி
ஊரினைப்
பிரித்து
தென்காசி
எனும்
பேரினைக்
கொடுத்தாய்...

தற்கால
பெருமை
சொல்லும்
மேம்பாலம்
உனக்கு

கற்கால
பெருமை
சொல்லும்
குற்றாலம்
எனக்கு...

சேட்டைகள்
செய்யும்
நெல்லை
உனக்கு

சேட்டன்கள்
வாழும்
கேரளத்தின்
எல்லை
எனக்கு...

பாரம்பரியமிக்க
பாளையங்கோட்டை
உன்னிடம்

தன்மானமிக்க
தலைவன்கோட்டை
என்னிடம்...

வம்பை
தவிர்க்கும்
அம்பாசமுத்திரமும்
வம்பை
வளர்க்கும்
கோபாலசமுத்திரமும்
உங்களுக்கு...

பண்பை
வளர்க்கும்
பாவூர்சத்திரமும்

அன்பை
பெருக்கும்
பனவடலிசத்திரமும்
எங்களுக்கு...

கைதியை
அடைக்கும்
சென்ட்ரல்
உங்களுக்கு

மனதினை
மயக்கும்
தென்றல்
எங்களுக்கு...

ஆற்றங்கரை 
குளியல் உங்களுக்கு 
அருவி குளியல் 
எங்களுக்கு. 

உங்களுக்கு
ராதாபுரம்

எங்களுக்கும்
செங்கலுக்கும்
மாதாபுரம்...

ஆலங்குளத்து
ஆலையின்
அரிசியை
பதிலளிப்பேன்...

மானூரிலிருந்து
லேட்டா
வந்தாலும்
பிரானூர்
புரோட்டாவை
பரிசளிப்பேன்...

பழவூரின்
பசுமோரை
பாவூரின்
பசுங்கீரைக்கு
பகிர்ந்தளிப்பேன்...

மணிமுத்தாரை
வைத்துக்கொண்டு
அடவிநயினாரை
எனக்களித்தாய்...

கட்ட
பொம்மனையும்
பாரதியையும்
பங்காளிக்கு
வழங்கிவிட்டு

வாஞ்சி
நாதனையும்
பூலித்தேவனையும்
தென்காசிக்கென
முழங்கிவிட்டாய்...

கடல்
இல்லையென
கவலை
கொண்டோம்

பாதி
உடலையும்
காசி
விஸ்வநாதன்
திடலையும்
தந்து
திகைக்க
வைத்தாய்...

ஒன்றின்மேல்
ஒன்றமர்ந்தாலும்
குன்றின்மேல்
குடியிருக்கும்
எங்கள்
திருமலைக்
குமரனுக்கு
ஈடில்லையென
குதூகலித்தோம்...

மங்கையான
சங்கை
அதிவிரைவில்
தங்கையாக
உதயமாக
எங்கள்
பங்கை
செலுத்திடுவோம்

திருவேங்கடத்து
மக்களின்
தாங்கொணாத்
துயரைத்தை
துடைத்திடுவோம்...

நெல்லையின்
கெத்து
இல்லையெனும்
சொல்லை
உடைத்திடுவோம்...

அப்பனே
நெல்லையப்பா
அல்வாவாலும்

நீ பேர்பெற்றாய்.....
பிரிவு வருத்தான்....

திருநெல்வேலியிலிருந்து பிரிந்ததென்காசி மாவட்ட வரைபடம்.
தென்காசியை தலைநகராகக்கொண்டு ஆண்ட பாண்டியர்களின் நினைவுக்கு வருகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-11-2019

#KsRadhakrishnan 
#KSR_Posts


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...