Saturday, November 23, 2019

#முரசொலி_மாறன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். #சில_நிகழ்வுகள



————————————————-
தலைவர் கலைஞருக்கும் முரசொலி மாறனுக்கும்நிறைய வாக்குவாதம் வரும். கோபமாக பேசிவிட்டு மாறன் அவர்கள் கலைஞரின் வீட்டின் அருகில் இருந்த தனது வீட்டிற்கு சென்றுவிடுவார். தயாளு அம்மையார் உணவு பரிமாறினாலும் கலைஞர் சாப்பிடாமல் காத்திருப்பார். 
தயாளு அம்மையார் அவர்கள் மாறனுக்கு மாமா சாப்பிடவில்லை என தகவல் சொல்லி அனுப்பினால் உடனே வந்து கலைஞரின் முன் இருக்கும் உணவை தான் எடுத்து கொண்டு சூடான உணவை கலைஞருக்கு பரிமாற சொல்வார். அதோடு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.

மாறன் மறைந்த போது என்னை தூக்கி போடவேண்டியவன் நீ எனக்கு முன்னரே போயிட்டயே என கூறி கலைஞர் கதறி அழுதார்.
-டில்லி சம்பத் 

முரசொலி மாறன் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து பல பணிகளை
ஒப்படைப்பார். அதில் ஒன்றுஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு டில்லி சம்பத் மற்றும் என்னிடம் கவனிக்க கூறினார்.
வழக்கறிஞர்மோகன்உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கை வேறு மாநிலத்திற்க்கு மாற்ற பேராசிரியர் மனுவை முதலில் 
தாக்கல் செய்தார். எங்களுக்கு 
டில்லியில் உதவியாக அன்றைய மத்திய மக்கள் நலவாழ்வு ராஜாங்க அமைச்சர் திரு ஆ.ராஜா மற்றும் அவருடைய செயலார் திரு அகிலன் இருந்தனர்.
பொதுக்குழுவில் என் குறித்து
முரசொலி மாறன் அவர்கள் பேசியது....
(தினமலர்)

முரசொலி மாறன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.அவர் மறைவு
எனக்கு தனிப்பட்ட இழைப்பு பல நிலையில்....

#முரசொலிமாறன்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-11-2019.

#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment