--------------------
ஐக்கிய நாடுகள் சபையின் நிதிநிலையை மேம்படுத்த வேண்டி அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களின் பங்களிப்பாக ஈவுத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும். அதன்படி நிரந்தர நாடுகள், உறுப்பு நாடுகள் என தனித்தனியாக குறிப்பிட்ட விகிதத்தில் செலுத்தியாக வேண்டும். இந்த தொகையைக் கொண்டே ஐ.நாவின் மூலம் நடைபெறும் புனர்வாழ்வுத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி வழங்கப்படும்.
இதன்படி, அமெரிக்கா 22 சதவீதமும், ரஷ்யா 3.08 சதவீதமும், சீனா 7.92 சதவீதமும், பிரான்ஸ் 4.85 சதவீதமும், பிரிட்டன் 4.46 சதவீதம் என்ற அளவில் வழங்குகிறது. இந்திய அரசு வழங்க வேண்டிய 0.73 சதவீத ஈவுத்தொகையை அளித்துவிட்டது. ஆனால் அமெரிக்கா வழங்க வேண்டிய முழுமையான தொகையை வழங்கவில்லை எனத் தெரிகிறது. ஐநா மன்றம் தற்போது பொருளாதார சிக்கலில் தள்ளாடுகிறது.
தன்னுடைய பணிகளையும் படிப்படியாக குறைத்துவிட்டது. லீக் ஆப் நேசன்ஸ் எப்படி முடக்கப்பட்டதோ காலப்போக்கில் ஐ.நாவும் ஆகிவிடக் கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. ஐ.நா. உலகின் அடையாளமாகத் திகழ்கிறது. ஆனால், ஐ.நாவின் பணிகள் பல இடங்களில் குழப்பமான நிலையில் தவறுகளும் நேர்ந்தன. குறிப்பாக ஈழப்பிரச்சனையில் என்ன நடந்தது என்று நமக்கே தெரியும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-12-2019
#KSRadhakrishnanPostings
#KSRPostings
#League_of_nations
No comments:
Post a Comment